ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு ஆராதனை

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on
1 min read

சென்னை: ஈஸ்டர் பண்​டிகையை ஒட்டி தேவால​யங்​களில் நடை​பெற்ற நள்​ளிரவு சிறப்பு ஆராதனை​யில் ஏராள​மான கிறிஸ்​தவர்​கள் பங்​கேற்​றனர்.

இயேசு கிறிஸ்து உயிர்த்​தெழுந்த பெரு​விழா​வான ஈஸ்​டர் பண்​டிகைக்கு முன்​ன​தாக கிறிஸ்​தவர்​கள் அனுசரிக்​கும் 40 நாள் தவக்​காலம் கடந்த பிப்​ர​வரி 18-ம் தேதி சாம்​பல் புதன்​கிழமை​யுடன் தொடங்​கியது.

இதைத்​தொடர்ந்து கடந்த மார்ச் 29-ம் தேதி குருத்​தோலை ஞாயிறு கொண்​டாடப்​பட்​டது. குருத்​தோலை ஞாயிறு முதல் ஈஸ்​டர் பண்​டிகை வரையி​லான காலம் புனித வார​மாக கடைபிடிக்​கப்​படும்.

அந்த வகை​யில், புனித வாரத்​தில் பெரிய வியாழன் அன்று கத்​தோலிக்க தேவால​யங்​களில் பாதம் கழு​வும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. இயேசு கிறிஸ்து சிலு​வை​யில் அறையப்​படு​வதற்கு முந்​தைய நாளில் தனது 12 சீடர்​களின் பாதங்​களைக் கழுவி தூய்​மைப்​படுத்​தி​யதை நினை​வு​கூரும் வண்​ணம் ஒவ்​வோர் ஆலயத்​தி​லும் பாதிரி​யார்​கள் 12 பேரின் பாதங்​களை கழுவி சுத்​தப்​படுத்​தினர்.

சாந்​தோம் திருத்​தலத்​தில் சென்னை மயிலை உயர் மறை​மாவட்ட பேராயர் எஸ்​.ஜார்ஜ் அந்​தோணி​சாமி 12 பேரின் பாதங்​களை சுத்​தப்​படுத்​தி​னார்.

இந்​நிலை​யில், புனித வாரத்​தின் முக்​கிய நிகழ்​வான புனித வெள்ளி கடந்த வெள்​ளிக்​கிழமை அனுசரிக்​கப்​பட்​டது.

இயேசு கிறிஸ்​து​வின் சிலு​வைப்​பாடு​களை நினை​வு​கூரும் வித​மாக, அனைத்து கத்​தோலிக்க தேவால​யங்​களி​லும் சிலு​வைப் பாதை​யும், அதைத் தொடர்ந்து திருச்​சிலுவை ஆராதனை​யும் நடை​பெற்​றன.

சாந்​தோம் பேரால​யம், லஸ் சர்ச், பெசன்ட் நகர் புனித ஆரோக்​கிய அன்னை ஆலயம், எழும்​பூர் திரு இருதய ஆண்​ட​வர் ஆலயம் உள்​ளிட்ட கத்​தோலிக்க தேவால​யங்​களி​லும், அண்ணா சாலை கதீட்​ரல் பேரால​யம், எழும்​பூர் புனித திரு​முழுக்கு யோவான் ஆலயம் உள்​ளிட்ட சிஎஸ்ஐ ஆலயங்​களி​லும், ஈசிஐ உள்​ளிட்ட இதர கிறிஸ்தவ சபைகளின் ஆலயங்​களி​லும் நடை​பெற்ற புனித வெள்ளி சிறப்பு ஆராதனை​யில் ஏராள​மான கிறிஸ்​தவர்​கள் பங்​கேற்​றனர்.

இந்​நிலை​யில், ஈஸ்​டர் பண்​டிகை நேற்று உற்​சாக​மாக கொண்​டாடப்​பட்​டது. இதை யொட்டி நேற்று நள்​ளிரவு கிறிஸ்தவ ஆலயங்​களில் ஈஸ்​டர் சிறப்பு ஆராதனை​கள் நடை​பெற்​றன.

கத்​தோலிக்க ஆலயங்​களில் இயேசு கிறிஸ்து கல்​லறை​யில் இருந்து உயித்​தெழுந்​ததை நினைவு கூறும் காட்சி நள்​ளிரவு 12 மணிக்கு காட்​சிப்​படுத்​தப்​பட்டு உயிர்த்த இயேசு​வின் சொரூபம் வைக்​கப்​பட்​டது.

சிறப்பு திருப்​பலி மற்​றும் ஆராதனை முடிந்த பிறகு ஒவ்​வொரு​வரும் அருகே இருந்​தவர்​களுக்கு கைகுலுக்கி ஈஸ்​டர் வாழ்த்​துகளை பரி​மாறிக்​கொண்​டனர்​.

<div class="paragraphs"><p>ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள். | படம்: <em>எஸ்.சத்தியசீலன்</em> |</p></div>
வேளாங்கண்ணியில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in