திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் முகப்பு கோபுரம் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் முகப்பு கோபுரம் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

Updated on
2 min read

திருமலை: ​திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு இன்று அதி​காலை 1.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்​கப்​பட்டு ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்து வரு​கின்​றனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு இன்று அனைத்து வைஷ்ணவ கோயில்​களி​லும் சொர்க்க வாசல் திறக்​கப்​பட்டு பக்​தர்​கள் சுவாமியை வழிபட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் இன்று செவ்​வாய்க்கிழமை அதி​காலை 1.30 மணிக்கு கோயி​லின் வெளிப்​புறத்​தில் உள்ள சொர்க்க வாசல் திறக்​கப்​பட்​டது. பூஜைகள் நடத்​தப்​பட்ட பின்​னர், பக்​தர்​கள் சொர்க்க வாசலில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். சொர்க்க வாசலில் வித​வித​மான மலர் அலங்​காரங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

ஏழு​மலை​யானின் கற்ப கிரக சன்​ன​திக்கு ஒட்​டியபடி பக்​தர்​கள் சொர்க்க வாசல் வழியே உள்ளே சென்று உண்​டியல் வைக்​கப்​பட்​டுள்ள இடத்​தில் வெளியே வரு​கின்​றனர். சொர்க்க வாசல் முழு​வதும் ஸ்ரீவாரி சேவகர்கள், விஜிலென்ஸ் ஊழியர்​கள் நின்றபடி பக்​தர்​களை வரிசை​யாகவும், விரை​வாக​வும் செல்​லு​மாறு அறி​வுறுத்தி வரு​கின்​றனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்​டு, கோயிலுக்கு வெளியே அஷ்ட லட்​சுமி அலங்​காரம் செய்​யப்​பட்​டுள்​ளது. இது பக்​தர்​களை வெகு​வாக கவர்ந்​துள்​ளது. மேலும் கோயிலுக்​குள் மலர் அலங்​காரம் கண்ணை கவரும் விதத்​தில் உள்​ளது. இரவு நேரத்​தில் திரு​மலை முழு​வதும் வண்ண விளக்​கு​களால் ஜொலிக்​கிறது.

வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்​றும் ஜன.1-ம் தேதி ஆங்​கில புத்​தாண்டு என வரிசை​யாக 30, 31 மற்​றும் ஜன. 1-ம் தேதி மட்​டும் திருப்​பதி தேவஸ்​தானம் ஏற்​க​னவே குலுக்​கல் முறை​யில் தரிசன டிக்​கெட்​டு​களை ஆன்​லைன் மூலம் பக்​தர்​களுக்கு வழங்கிவிட்​டது. இதன் மூலம் நாள் ஒன்​றுக்கு சுமார் 70 ஆயிரம் சாமானிய பக்​தர்​கள் சுவாமியை தரிசித்து வரு​கின்​றனர். 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை எவ்​வித டோக்​கன்​களோ டிக்​கெட்​டு​களோ இல்​லாமல் பக்​தர்​கள் தர்ம தரிசனம் மூலம் சுவாமியை தரிசிக்​கலாம் என திருப்​பதி தேவஸ்​தானம் ஏற்​கெ​னவே அறி​வித்​துள்​ளது.

வைகுண்ட ஏகாதசி ஏற்​பாடு​கள் குறித்து திருப்​பதி தேவஸ்​தான கூடு​தல் நிர்​வாக அதி​காரி வெங்​கைய்ய சவுத்ரி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வைகுண்ட ஏகாதசி​யன்று (செவ்​வாய்க்கிழமை) அதி​காலை 1.30 மணி முதல் இரவு 11.45 மணி வரை தொடர்ந்து 20 மணி நேரம், சுமார் 70 ஆயிரம் பக்​தர்​களுக்கு சுவாமி தரிசனம் செய்ய ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. டிக்​கெட் உள்​ளவர்​கள் அதில் குறிப்​பிட்ட நேரத்​தில் மட்​டும் குறிப்​பிட இடத்​துக்கு வந்​தால் போது​மானது. அப்​படி வந்​தால் 2 அல்​லது 3 மணி நேரத்​துக்குள் சுவாமியை தரிசித்து விடலாம்.

வரிசை​யில் காத்​திருக்​கும் பக்​தர்​களுக்கு புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம் உள்​ளிட்ட 16 வகை அன்ன பிர​சாதங்​கள் வழங்​கப்​படு​கிறது. மேலும் குடிநீர், டீ, காபி போன்​றவை​யும் வழங்​கப்​படு​கிறது. மேலும் சிறு​வர்​களுக்கு பாலும் வழங்​கப்​பட்டு வரு​கிறது. 24 மணி நேர​மும் அன்​னபிர​சாதம் வழங்​கப்​படு​கிறது. 4.50 லட்​சம்​ லட்​டு பிர​சாதங்​கள்​ தயார்​ நிலை​யில்​ வைக்​கப்​பட்​டுள்​ளன என கூறி​னார்​.

<div class="paragraphs"><p>வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் முகப்பு கோபுரம் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.</p></div>
கடும் பனிமூட்டம்: டெல்லிக்கு ரெட் அலர்ட்; 128 விமானங்கள் ரத்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in