வடபழனி, திருப்போரூர், சிறுவாபுரி, கந்தகோட்டம் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்

திருத்தணியில் சுப்பிரமணிய சுவாமிக்கு புஷ்பாஞ்சலி
கந்த சஷ்டியை முன்னிட்டு, வடபழனி  முருகன் கோயிலில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டம்.

கந்த சஷ்டியை முன்னிட்டு, வடபழனி முருகன் கோயிலில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டம்.

Updated on: 
2 min read

சென்னை/திருவள்ளூர்/காஞ்சி: திருப்​போரூர், சிறு​வாபுரி, கந்​தகோட்​டம், வடபழனி உள்​ளிட்ட முருகன் கோயில்​களில் சூரசம்​ஹாரம் நேற்று வெகு விமரிசையாக நடை​பெற்​றது. திருத்​தணி​யில் புஷ்​பாஞ்​சலி நடை​பெற்​றது. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் இவ்​விழா​வில் பங்​கேற்று முருகப் பெரு​மானை வழிபட்​டனர்.

சென்னை வடபழனி முருகன் கோயி​லில் இந்த ஆண்​டுக்​கான கந்​தசஷ்டி விழா கடந்த 10-ம் தேதி லட்​சார்ச்​சனையுடன் தொடங்​கியது. விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரத்தை முன்​னிட்டு, அதி​காலை முதலே ஏராளமான பக்​தர்​கள் கோயி​லில் குவிந்​தனர். சுமார் 2 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசையில் காத்​திருந்து பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

காலை 6 மணிக்கு நடை​பெற்ற மகா கந்​தசஷ்டி லட்​சார்ச்​சனை​யில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​றனர். பின்​னர் கோயில் குளத்​தில் தீர்த்​தவாரி நடை​பெற்​றது. மாலை 6.30 மணி​யளவில் மகா தீபாராதனை நடை​பெற்​றது. இரவு 8 மணி​யளவில், சூரபத்​மனை வதம் செய்​வதற்​காக அம்​பாளிட​மிருந்து வேல் பெறும் நிகழ்​வும், சூரசம்​ஹார​மும் நடை​பெற்​றது.

<div class="paragraphs"><p>மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான்.</p></div>

மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான்.

இதேபோல், சென்னை கந்​தகோட்​டம் முருகன் கோயி​லிலும் நேற்று சூரபத்​மனை முருகப் பெரு​மான் வதம் செய்​யும் நிகழ்வு நடை​பெற்​றது.

இதேபோல் சென்னை முழு​வதும் பல்​வேறு முருகன் கோயில்​களி​லும் சூரசம்​ஹார விழா வெகு விமரிசையாக நடை​பெற்​றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல முருகப்​பெரு​மான் ஆகாய மார்க்​க​மாகச் சென்று சூரபத்​மனை வதம் செய்த திருத்​தலமாகப் போற்​றப்​படும் செங்​கல்​பட்டு மாவட்​டத்​தின் புகழ்​பெற்ற திருப்​போரூர் கந்​தசுவாமி கோயி​லிலும் கந்​தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடை​பெற்​றது. இதில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்று சுவாமி தரிசனம் செய்​தனர்.

திருச்​செந்​தூரில் சூரபத்​மனை வதம் செய்த முருகப்​பெரு​மான் திருத்​தணி மலை​யில் சினம் தணிந்​தார் என்​பது ஐதீகம். எனவே மற்ற முருகன் கோயில்​கள் போல் இல்​லாமல் திருத்​தணி சுப்​பிரமணிய சுவாமி திருக்​கோயி​லில் புஷ்​பாஞ்​சலி விழா நடை​பெறும்.

அந்த வகை​யில் நேற்று திருத்​தணி​யில் புஷ்​பாஞ்​சலி நடை​பெற்​றது. நேற்று அதி​காலை மூல​வர் முருகப்​பெரு​மான் சந்​தனக்​காப்பு அலங்​காரத்​தில் பக்​தர்​களுக்கு காட்சி அளித்​தார். தமிழக அமைச்​சர்​கள் வெங்​கடரமணன், காந்​திராஜ் ஆகியோ​ரும் சாமி தரிசனம் செய்​தனர்.

பல்​வேறு ஊர்​களி​லிருந்து கொண்​டுவரப்​பட்ட 5 டன் மலர்​களால் புஷ்​பாஞ்​சலியும், மகா தீபாராதனையும் நடை​பெற்​றது. இன்று காலை 10 மணிக்கு திருக்​கல்​யாண உற்​சவம் நடை​பெற உள்​ளது.

இதேபோல பொன்​னேரி வட்​டத்​தில் உள்ள சின்​னம்​பேடு பகுதி​யில் உள்ள சிறு​வாபுரி பாலசுப்​பிரமணிய சுவாமி திருக்​கோயி​லிலும் நேற்று சூரசம்​ஹார உற்​சவம் கோயில் எதிரே சந்​நிதி தெரு​வில் நடை​பெற்​றது.

<div class="paragraphs"><p>கந்த சஷ்டியை முன்னிட்டு, வடபழனி  முருகன் கோயிலில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டம். </p></div>
நூலகங்களுக்கு நூல்கள் வாங்கியதில் முறைகேடு புகார்: தலைமை நூலகர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம்

X