ஆவணி பவுர்ணமியையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்தத்தில் சமுத்திர ஆரத்தி

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நடைபெற்ற சமுத்திர ஆரத்தி.

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நடைபெற்ற சமுத்திர ஆரத்தி.

Updated on
1 min read

ராமேசுவரம்: ஆவணி பவுர்ணமியையொட்டி, ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் சமுத்திர ஆரத்தி நடைபெற்றது.

மகா சமுத்திர ஆரத்தி சமிதி சார்பில், அக்னி தீர்த்தக் கடற்கரை மாசுபடாமல் இருக்கவும், இயற்கை சீற்றத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டியும், மழை வேண்டியும், அக்னி தீர்த்தக் கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு சமுத்திர ஆரத்தி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, மகா சமுத்திர ஆரத்தி சமிதியின் செயலாளர் தில்லைபாக்கியம் தலைமை வகித்தார். அக்னி தீர்த்தக் கடற்கரையில் சமுத்திர பகவானுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து, சமுத்திர ஆரத்தி நடைபெற்றது. இதில் வடமாநில பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.

<div class="paragraphs"><p>ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நடைபெற்ற சமுத்திர ஆரத்தி.</p></div>
ஆதவ் அர்ஜுனாவின் தவறான பேச்சுகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குக: தமிழக பாஜக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in