ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க பெட்டகங்கள் தயார்

3 கோபுர வாசல்களிலும் கவுன்ட்டர்கள் அமைப்பு
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க பெட்டகங்கள் தயார்
Updated on
1 min read

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் வரும் பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க 3 கோபுர வாசல்களிலும் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 3 ஆயிரம் பெட்டகங்களில் அதிகபட்சமாக 15 ஆயிரம் செல்போன்கள் வரை வைத்து பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய கோயில்களில் வரும் செப்.1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. கோயில்களின் புனிதத் தன்மையைப் பேணவும், செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் ரீல்ஸ் எடுப்பதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பதற்காக 3 கோபுர வாசல்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறும்போது, ‘‘செப்.1-ம் தேதி முதல் ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் செல்போன்கள் அனுமதிக்கப்படாது. இதற்காக, ஸ்ரீரங்கம் தெற்கு கோபுர வாசல், வடக்கு வாசல், கிழக்கு வாசல் என 3 இடங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், தெற்கு கோபுர வாசல் பகுதியில் காலணிகள் பாதுகாக்குமிடம் அருகில் உள்ள கவுன்ட்டரில், வங்கி லாக்கர் போன்று 2 ஆயிரம் பெட்டகங்கள் உள்ளன. இதில், ஒரே குழுவாக வந்தால் ஒரு பெட்டகத்துக்கு 5 செல்போன்கள் வரைவைத்து கொள்ளலாம்.

இதேபோல, வடக்கு, கிழக்கு வாசல்களில் தலா 500 பெட்டகங்கள் கொண்ட செல்போன் வைப்பறைகள் தயார் நிலையில் உள்ளன. மொத்தம் 3,000 பெட்டகங்களில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 15 ஆயிரம் செல்போன்கள் வரை வைக்க முடியும். இதற்காக ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க பெட்டகங்கள் தயார்
மரம் ஏறும் தொழிலாளி மகளுக்கு மருத்துவ படிப்பில் இடம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in