ஒருநாள் வழிபாட்டுக்காக சபரிமலையில் இன்று கோயில் நடை திறப்பு

ஒருநாள் வழிபாட்டுக்காக சபரிமலையில் இன்று கோயில் நடை திறப்பு
Updated on: 
1 min read

குமுளி: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஒவ்​வொரு ஐப்​பசி மாத சித்​திரை நட்​சத்​திரத்​தில் ஒருநாள் சிறப்பு வழிபாடு நடை​பெறு​வது வழக்​கம். இந்த ஆண்​டுக்​கான வழிபாடு நாளை (சனிக்​கிழமை) நடை​பெற உள்​ள​தால், இன்று மாலை கோயில் நடை திறக்​கப்​படு​கிறது.

சிறப்பு வழிபாடுகள் எது​வும் இன்றி, தரிசனத்​துக்கு மட்​டுமே பக்​தர்​கள் அனுமதிக்​கப்​படுவர். பின்​னர், இரவு நடை அடைக்​கப்​படும். தொடர்ந்து, நாளை அதி​காலை 5.30 மணிக்கு மகாகணபதி ஹோமத்​துடன் வழிபாடுகள் தொடங்​கும்.

காவடி​யார் அரண்​மனை​யில் இருந்து கொண்​டுவரப்​பட்ட நெய்யை எடுத்து அபிஷேகம் செய்​யப்​படும். மதி​யம் பூஜை, தீபாராதனை, படிபூஜை நடை​பெற்று, இரவு 10 மணிக்கு ஹரிவ​ராசனம் எனும் ​பாடலுடன் கோயில் நடை சாத்​தப்​படும். இதன்​பின்​னர், நவம்​பர் 16-ம் தேதி மாலை மண்​டல கால தொடர் வழிபாட்​டுக்​காக, கோயில் நடை மீண்​டும் திறக்​கப்​படும்.

ஒருநாள் வழிபாட்டுக்காக சபரிமலையில் இன்று கோயில் நடை திறப்பு
ஆந்திர கடற்பகுதியில் சென்னை மீனவர்கள் 5 பேர் சடலம் மீட்பு; 4 பேரை தேடும் பணி தீவிரம்

X