ஆவணி மாத வழிபாட்டுக்காக சபரிமலையில் இன்று நடைதிறப்பு

ஆவணி மாத வழிபாட்டுக்காக சபரிமலையில் இன்று நடைதிறப்பு
Updated on
1 min read

குமுளி: ​மா​தாந்​திர வழி​பாட்​டுக்​காக சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் இன்று மாலை நடை திறக்​கப்பட உள்​ளது.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஒவ்​வொரு மலை​யாள மாத தொடக்​கத்​தி​லும் நடை திறக்​கப்​பட்டு 5 நாட்​கள் வழி​பாடு நடை​பெறு​வது வழக்​கம். இதன்​படி சிங்​கம் (ஆவணி) மாத வழி​பாட்​டுக்​காக இன்று (ஞா​யிறு) மாலை கோயில் நடை​திறக்​கப்பட உள்​ளது. கோயி​லின் தலைமை அர்ச்​சகர் (தந்​திரி) கண்​டரரு பிரம்​மதத்​தன் முன்​னிலை​யில் மேல்​சாந்தி பிர​சாத் நம்​பூ​திரி, நடையை திறக்க உள்​ளார். இதைத் தொடர்ந்து ஐயப்​பனின் விக்​கிரகத்​தின் மேல் சாத்​தப்​பட்​டுள்ள விபூதி அகற்​றப்​பட்டு தவக்​கோல நிலை மாற்​றப்​படும்.

தொடர்ந்து 18-ம்​ படி வழியே சென்று அங்​குள்ள ஆழிக்​குண்​டத்​தில் புனிதஜோதி ஏற்​றப்​படும். பின்பு பக்​தர்​களுக்கு விபூதி பிர​சாத​மாக வழங்​கப்​பட்டு அன்று எந்த பூஜை​யும் நடை​பெறாது.

இரவு கோயில் நடை சாத்​தப்​பட்டு பின்பு மறு​நாள் (நாளை) அதி​காலை முதல் தொடர்ந்து 5 நாட்​களுக்கு பல்​வேறு வழி​பாடு​கள் நடை​பெற உள்​ளது. 21-ம் தேதி இரவு நடை சாத்​தப்​பட்டு பின்பு ஓணம் வழி​பாட்​டுக்​காக மீண்​டும் 24-ம் தேதி கோயில் நடை திறக்​கப்​பட்டு 28-ம் தேதி வரை வழி​பாடு​கள் நடை​பெறும்.

தற்​போது சபரிமலை​யில் பரு​வ​மழை தொடர்​வ​தால் பக்​தர்​கள் குடை, மழை கோட் உள்​ளிட்ட பாது​காப்பு ஏற்​பாடு​களு​டன் வர வேண்​டும். இவ்​வாறு தேவசம் போர்டு அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

ஆவணி மாத வழிபாட்டுக்காக சபரிமலையில் இன்று நடைதிறப்பு
தமிழ்க்கடவுள் முருகன் குறித்து அவதூறாக பதிவிட்ட கோவை இளைஞர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in