மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் திறப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சபரிமலை: சபரிமலையில் 41 நாள் மண்டல பூஜைகள் நிறைவடைந்தபின் கடந்த 27-ம் தேதி இரவு 10 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் சபரிமலை யாத்திரையின் நிறைவாக வரும் மகரவிளக்கு பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோயில் கருவறையை மேல்சாந்தி பிரசாத், தந்திரி மகேஷ் மோகனரு முன்னிலையில் திறக்கிறார்.

சன்னிதானத்தில் ஆழி தீபம் ஏற்றியபின் பக்தர்கள் 18-ம் தேதி படியேறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். மகரவிளக்கு பூஜைகளின் நிறைவாக வரும் மகரஜோதி தரிசனம் ஜனவரி 14-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மகரவிளக்கு விழாவுக்காக ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்புப்படம்
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதா: திருப்பி அனுப்பினார் முர்மு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in