இரவீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: வியாசர்பாடியில் திரளான பக்தர்கள் தரிசனம்

வியாசர்பாடி மரகதாம்பாள் உடனுறை இரவீஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

வியாசர்பாடி மரகதாம்பாள் உடனுறை இரவீஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Updated on
1 min read

சென்னை: வியாசர்​பாடி​யில் சுமார் 800 ஆண்​டு​கள் பழமை வாய்ந்த மரக​தாம்​பாள் உடனுறை இரவீஸ்வரர் கோயில் உள்ளது. சூரிய பகவான் இத்​தலத்​துக்கு வந்து சிவபெரு​மானை வழிபட்​ட​தாக கருதப்​படு​வ​தால், மூல​வர் ‘இரவீஸ்வரர்’ என்ற பெயரில் அழைக்​கப்​படு​கிறார்.

தின​மும் இக்​கோயி​லின் ராஜ கோபுரம் வழி​யாக நுழை​யும் சூரியக் கதிர்​கள் நந்தி தேவர் மற்​றும் மூல​வர் சிவலிங்​கத்​தின் மீது நேரடி​யாக பட்டு வழிபடு​வது சிறப்​பம்​சம் ஆகும்.

காலப்​போக்​கில், சுற்​றி​யுள்ள சாலைகளின் உயரம் அதி​கரித்​த​தால், கோயில் தரைமட்​டத்​தில் இருந்து சுமார் 5 அடி பள்​ளத்​துக்​குச் சென்​றது. இதனால் சூரிய ஒளி மூல​வர்மீது விழு​வ​தில் தடை ஏற்​பட்​டதுடன், மழைக்​காலங்​களில் கோயிலுக்​குள் மழைநீர் புகுந்து பக்​தர்​கள் பெரும் சிரமமடைந்​தனர்.

இந்த நிலை​யில், பக்​தர்​களின் நீண்​ட​நாள் கோரிக் கையை ஏற்​று, இந்து சமய அறநிலை​யத்துறை சார்​பில் ‘ஜாக்​கி’ தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​தி, ஒட்​டு மொத்த கோயிலை​யும் தரைமட்​டத்​துக்கு மேல் உயர்த்தி பலப்​படுத்​தும் பணி மேற்​கொள்​ளப்​பட்​டது.

இப்​பணி​கள் வெற்​றிகர​மாக முடிந்​ததை அடுத்​து, கும்​பாபிஷேக ஏற்​பாடு​கள் நடை​பெற்​றன. நேற்று காலை 8.30 மணி அளவில் சிவ வாத்​தி​யங்​கள் முழங்க, தேவார, திரு​வாசகப் பண்​ணிசைகள் ஒலிக்க, ராஜகோபுரம், மூல​வர் சுவாமி - அம்​பாள் மற்​றும் பரி​வார மூர்த்​தி​களின் விமானங்​களுக்கு கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது.

கோயிலைச் சுற்​றி​லும் திரளாக கூடி​யிருந்த பக்​தர்​கள் ‘ஓம் நமச்​சி​வாய’ என்ற பக்தி முழக்​கத்​துடன் தரிசனம் செய்​தனர். பின்​னர், பக்​தர்​கள் மீது புனிதநீர் தெளிக்​கப்​பட்​டது.

மதி​யம் 2 மணி அளவில் மகா அபிஷேகம் செய்​யப்​பட்​டு, மகா தீபா​ராதனை காண்​பிக்​கப்​பட்​டது. இரவு 7 மணிக்கு திருக்​கல்​யாண உற்​சவம், பஞ்​சமூர்த்​தி​கள் வீதி உலா நடை​பெற்​றது. கோயில் நிர்​வாகம் மற்​றும் காவல் துறை சார்​பில் சிறப்​பானஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​த​தால்​, பக்​தர்​கள்​ சிரமமின்​றி தரிசனம்​ செய்​தனர்​.

<div class="paragraphs"><p>வியாசர்பாடி மரகதாம்பாள் உடனுறை இரவீஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.</p></div>
திருப்பூரில் வங்க தேசத்தினர் 6 பேர் கைது: தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in