தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா பந்தல்கால் முகூர்த்தம்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா பந்தல்கால் முகூர்த்தம்
Updated on: 
1 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,041-வது சதய விழாவுக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள், அவர் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் படி, நிகழாண்டு அவரது 1,041-வது சதயவிழா அக்.21, 22 தேதிகளில் நடைபெறுகிறது.

சதய விழா நாளான அக்.22-ம் தேதி மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறை வீதியுலா, பெருவுடையார், பெரியநாயகிக்கு பேராபிஷேகம், பிற்பகலில் பெருந்தீப வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி, பெரிய கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஆர்.விஜய் சரவணன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழா குழுத் தலைவர் என்.எஸ்.சரவணன், துணைத் தலைவர் சங்கர் ராமன், மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா பந்தல்கால் முகூர்த்தம்
‘அபிஜித் தீப்கேவை டெல்லி போலீஸ் கடத்திச் சென்றுவிட்டது’ - சிஜேபி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in