திருமலையில் 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்

திருமலையில் 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்
Updated on: 
1 min read

திருமலை: திருப்பதி ஏழு​மலை​யான் கோயி​லில் நேற்று மாலை மிகவும் விமரிசையாக புஷ்ப யாகம் நிகழ்ச்சி நடந்​தது. பிரம்மோற்​சவ விழா​வினை தொடர்ந்து புஷ்பயாகம் நடைபெறுவது ஐதீகம். பிரம்​மோற்​சவத்​தில் ஏதாவது தோஷங்​கள் நடந்​திருந்​தால், திரு​வோண நட்​சத்​திரத்​தன்று புஷ்பயாகம் நடத்துவது ஐதீகம்.

கடந்த 15-ம் நூற்​றாண்டு வரை நடை​பெற்று வந்​த இந்த நடைமுறை் சில காரணங்​களால் கைவிடப்​பட்​டது. பின்னர் திரு​மலை திருப்​பதி தேவஸ்தானம் 1980-ம் ஆண்டு முதல் தொடர்ந்து புஷ்பயாகத்தை வைகானச ஆகம சாஸ்திரங்​களின்​படி மீண்டும் நடத்தி வரு​கிறது. இந்த புஷ்பயாகம் நேற்று திரு​மலை​யில் விமரிசையாக நடை​பெற்​றது.

இதன்படி, நேற்று காலை கோயி​லில் உள்ள சம்​பங்கி திருக்கல்யாண மண்​டபத்​தில் உற்​சவ மூர்த்​தி​களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத​மாய் மலை​யப்​பருக்கு சிறப்பு திரு​மஞ்​சன் நிகழ்ச்சிகள் நடந்​தன. 16 ரக மலர்​கள், 6 ரக புனித பத்​திரங்​கள் (இலைகள்) ஊர்​வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்​பட்​டன. இதனை தொடர்ந்து நேற்று மாலை உற்​சவ மூர்த்​தி​களுக்கு 9 டன் மலர்​கள் மற்​றும் புனித பத்​திரங்​களால் புஷ்பாபிஷேகம் நடைபெற்​றது.

திருமலையில் 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்
சூரசம்ஹார விழாவின்போது முதல்வர் விஜய்க்கு அரோகரா முழக்கம்: தலைவர்கள் கண்டனம்

X