விஜயதசமி நாளில் கோயில்களில் வித்யாரம்பம் - ‘அ’ எழுதி கல்வியைத் தொடங்கிய மழலைகள்

வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கோயில் அர்ச்சகர், ஒரு  குழந்தையின் விரலை பிடித்து அரிச்சுவடியைத் தொடங்கி வைத்தார்.

வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கோயில் அர்ச்சகர், ஒரு குழந்தையின் விரலை பிடித்து அரிச்சுவடியைத் தொடங்கி வைத்தார்.

Updated on: 
1 min read

சென்னை: நவராத்​திரி விழா​வின் நிறை​வாகக் கொண்​டாடப்​படும் விஜயதசமியை முன்​னிட்​டு, தமிழகத்​தின் பல்​வேறு கோயில்​களில் குழந்​தைகளுக்​கான வித்​யாரம்​பம் எனும் எழுத்​தறி​வித்தல் நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது.

இதில், ஏராள​மான பெற்​றோர் தங்​களது குழந்​தைகளின் கல்​விப் பயணத்​தைத் தொடங்கி வைத்​தனர். கல்​வி, கலைகள் மற்​றும் விளை​யாட்​டுப் பயிற்சிகளைத் தொடங்​குவதற்கு விஜயதசமி உகந்த நாளாகக் கருதப்​படு​கிறது.

இதையொட்​டி, சென்​னை​யில் பிரசித்தி பெற்ற வடபழனி முரு​கன் கோயில், ராஜா அண்​ணா​மலைபுரம் ஐயப்​பன் கோயில், மகாலிங்​கபுரம் ஐயப்​பன் - குரு​வாயூரப்​பன் கோயில், நங்​கநல்​லூர் குரு​வாயூரப்​பன் கோயில், அம்​பத்​தூர் ஐயப்​பன் கோயில் உள்​ளிட்ட பல்​வேறு கோயில்​களில் வித்​யாரம்​பம் நிகழ்ச்​சிக்கு நேற்று ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது.

இந்த நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​ப​தற்​காக, 2 முதல் 4 வயது வரையி​லான குழந்​தைகளு​டன் பெற்​றோர் கோயில்​களுக்கு வருகை தந்தனர்.

அர்ச்​சகர்​கள் வழி​காட்​டு​தலின்​படி, குழந்​தைகளின் நாக்​கில் ‘ஓம் ஹரி கணப​தயே நமஹ’ என்ற மந்​திரத்​தைப் பெற்​றோர் எழு​தினர்.

பின்​னர், குழந்​தைகளின் கைகளைப் பிடித்​து, நெல் மற்​றும் அரிசி​யில் ‘அ’ என எழுத வைத்​து, அவர் களின் கல்​விப் பயணத்​தை தொடங்கி வைத்​தனர்.

வடபழனி முரு​கன் கோயி​லில் நடை​பெற்ற வித்​யாரம்​பம் நிகழ்ச்​சி​யில், சென்னை ஐஐடி இயக்​குநர் காமகோடி, நடிகரும் இயக்​குநரு​மான ஒய்​.ஜி.மகேந்​திரன், இதய அறுவை சிகிச்சை நிபுணர்​கள் செங்​கோட்​டு​வேலு, ஜெய​ராஜ், ‘தாய் மண்​ணே’ புகழ் ரவி முரு​கையா மற்​றும் கோயில் துணை ஆணை​யர் சித்ரா தேவி பங்​கேற்​றனர்.

குழந்​தைகள் மற்​றும் பக்​தர்​களுக்கு ஆவின் நிறு​வனம் சார்​பில் இலவ ச​மாகப் பால் வழங்​கப்​பட்​டது.

முதன்​முதலாக எழுத்​துகளை எழுதும் அனுபவம் குழந்​தைகளுக்கு மகிழ்ச்​சி​யை​யும் உற்​சாகத்தை​யும் அளித்​தது. சில குழந்​தைகள் தாங்​களாகவே அரிசி​யில் எழு​தி​யும், கிறுக்​கி​யும் மகிழ்ந்தது​ பக்​தர்​களை கவர்ந்தது.

<div class="paragraphs"><p>வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கோயில் அர்ச்சகர், ஒரு  குழந்தையின் விரலை பிடித்து அரிச்சுவடியைத் தொடங்கி வைத்தார்.</p></div>
சென்னை கூவம் ஆற்றங்கரையை அழகுபடுத்த திட்டம்: 3 இடங்களில் மேம்பாட்டுப் பணிகளுக்கு டெண்டர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in