ஸ்ரீவில்லிபுத்தூரில் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட 93 வயது மூதாட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி.

ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி.

Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்​லிபுத்​தூர் பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் மகா சிவ​ராத்​திரியையொட்டி 64-வது ஆண்​டாக முத்​தம்​மாள் (93) என்ற மூதாட்டி கொதிக்​கும் நெய்​யில் கைகளால் அப்​பம் சுட்​டு, பக்​தர்​களுக்கு பிர​சாத​மாக வழங்​கி​னார்.

ஸ்ரீவில்​லிபுத்​தூர் முதலி​யார்​பட்டி தெரு​வில் உள்ள பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் மகா சிவ​ராத்​திரி தினத்​தில் கைகளால் கொதிக்​கும் நெய்​யில் அப்​பம் சுட்டு சுவாமிக்கு படைக்​கும் விசேஷ நிகழ்வு 100 ஆண்​டு​களுக்கு மேலாக நடை​பெற்று வரு​கிறது.

இதில் ஊரணிபட்டி தெரு​வைச் சேர்ந்த முத்​தம்​மாள் (93) என்​பவர் 63 ஆண்​டு​களாக சிவ​ராத்​திரி அன்று இரவு கொதிக்​கும் நெய்​யில் கையால் அப்​பம் சுட்டு வரு​கிறார்.

64-வது ஆண்​டாக இந்த ஆண்டு 48 நாட்​கள் விரதமிருந்த முத்​தம்​மாள், அம்மனுக்கு சாற்​றிய புட​வையை அணிந்​து​கொண்டு நேற்று முன்​தினம் நள்​ளிரவு 12 மணிக்கு கொதிக்​கும் நெய்​யில் அப்​பம் சுட்​டார். நெய்​யால் பக்​தர்​களுக்கு நெற்​றி​யில் தில​கமிட்டு மூதாட்டி ஆசி வழங்​கி​னார். அந்த அப்​பம் அம்​மனுக்கு படைக்​கப்​பட்டு பக்​தர்​களுக்கு பிர​சாத​மாக வழங்​கப்​பட்​டது.

<div class="paragraphs"><p>ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி.</p></div>
ஊட்டி 128-வது மலர் கண்காட்சிக்காக 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in