ஆங்கிலப் புத்தாண்டு கோலாகலம்: சென்னையில் கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலியும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக் கான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.

2025-ம் ஆண்டு நேற்றுடன் நிறைவடைந்து இன்று 2026 புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சாந்தோம் பேராலயத்தில் சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் சிறப்பு திருப்பலியும் புத்தாண்டு ஆராதனையும் நடந்தன. இதில் ஏராளான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

இதேபோல், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் பிரகாச மாதா ஆலயம் (லஸ் சர்ச்), ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூர் திருஇருதய ஆண்டவர் திருத்தலம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், பாரிமுனை தூய மரியன்னை இணை பேராலயம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப் பட்டது. ஆலயத்துக்கு வந்திருந்தவர்கள் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், சிஎஸ்ஐ திருமண்டல தலைமை ஆலயமான கதீட்ரல் பேராலயம், பழமை வாய்ந்த வேப்பேரி புனித அந்திரேயா ஆலயம், மயிலாப்பூர் குட் ஷெப்பர்டு ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம், எழும்பூர் புனித திருமுழுக்கு யோவான் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

புறநகர் பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலியும் ஆராதனையும் நடைபெற்றன. மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் உள்ள தூய விண்ணரசி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அலெக்சிஸ் மனோகர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தாம்பரம் பாத்திமா அன்னை ஆலயம், குரோம்பேட்டை அமலஉற்ப அன்னை ஆலயம், கூடுவாஞ்சேரி நல்மேய்ப்பர் ஆலயம், ஊரப்பாக்கம் ஆரோக்கிய அன்னை ஆலயம், காட்டாங்கொளத்தூர் புனித லூர்து அன்னை ஆலயம், ரயில் நகர் புனித அந்தோணியார் ஆலயம், எம்டிசி நகர் ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு திருப்பலியும், ஆராதனையும் நடைபெற்றன.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
லிஃப்ட் தரு​வ​தாகக் கூறி அழைத்​துச் சென்று பெண்ணை கூட்டு வன்​கொடுமை செய்து ஓடும் வேனில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in