லிஃப்ட் தரு​வ​தாகக் கூறி அழைத்​துச் சென்று பெண்ணை கூட்டு வன்​கொடுமை செய்து ஓடும் வேனில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்

லிஃப்ட் தரு​வ​தாகக் கூறி அழைத்​துச் சென்று பெண்ணை கூட்டு வன்​கொடுமை செய்து ஓடும் வேனில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஹரி​யா​னா​வில் 25 வயதுப் பெண்ணை லிப்ட் தரு​வ​தாக அழைத்​துச் சென்​று, கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்து வேனில் இருந்து தூக்கி வீசிய கொடூர சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது.

ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத், மெட்ரோ சவுக் பகு​தி​யில் கடந்த திங்​கட்​கிழமை இரவு 25 வயது பெண் ஒரு​வர் கல்​யாண்​புரி சவுக் செல்ல காத்​திருந்​தார்.

அப்​போது மாருதி வேனில் வந்த இரு ஆண்​கள் லிப்ட் தரு​வ​தாக கூறி அப்​பெண்ணை அழைத்​துச் சென்​றுள்​ளனர். இந்​நிலை​யில் அவர்​கள் அந்​தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​து, பிறகு ஓடும் வேனில் இருந்து வெளியே தள்​ளி​விட்​டு, தப்​பிச் சென்று விட்​டனர்.

இது தொடர்​பாக உ.பி. மற்​றும் ம.பி.யை சேர்ந்த இரு​வரை பரி​தா​பாத் போலீ​ஸார் பிடித்து விசா​ரித்​தனர். இரு​வரை​யும் நேற்று கைது செய்​தனர். குற்​றத்​துக்கு பயன்​படுத்​தப்​பட்ட வாக​னத்​தை​யும் பறி​முதல் செய்​தனர்.

இது தொடர்​பாக பரி​தா​பாத் போலீ​ஸார் நேற்று கூறிய​தாவது: வேனில் இருந்து வெளியே வீசப்​பட்​ட​தில் படு​கா​யம் அடைந்த அந்​தப் பெண் ஒரு​வழி​யாக சமாளித்து தனது சகோ​தரியை உதவிக்கு அழைத்​துள்​ளார். இதையடுத்து சகோ​தரி அங்கு விரைந்து வந்து அப்​பெண்ணை மருத்​து​வ​மனை​யில் சேர்த்​துள்​ளார்.

பிறகு சகோ​தரி​யின் புகாரின் அடிப்​படை​யில் மறு​நாள் கோட்​வாலி காவல் நிலை​யத்​தில் கூட்டு பாலியல் வன்​கொடுமை உள்​ளிட்ட பல்​வேறு குற்​றங்​கள் தொடர்​பாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.

சம்பவ நாளில் அந்​தப் பெண் தனது தோழி​யின் வீட்​டிலிருந்து திரும்​பிக் கொண்​டிருந்​தார். கல்​யாண்​புரி சவுக் செல்​வதற்கு எந்த வாக​ன​மும் கிடைக்​காத​தால் அவருக்​குத் தாமத​மாகி​விட்​டது. அவருக்கு லிப்ட் கொடுத்த இரு ஆண்​களும் கல்​யாண்​புரி சவுக் செல்​வதற்கு பதிலாக குரு​கி​ராம் சாலை​யில் சென்​றுள்​ளனர். பிறகு இந்த கொடூர குற்​றத்தை இழைத்​துள்​ளனர். இவ்​வாறு போலீ​ஸார் கூறினர்.

லிஃப்ட் தரு​வ​தாகக் கூறி அழைத்​துச் சென்று பெண்ணை கூட்டு வன்​கொடுமை செய்து ஓடும் வேனில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது மத்​தி​யஸ்​தம் செய்​த​தாக சீனா கூறியதற்கு என்ன பதில்? - பிரதமருக்கு காங்​கிரஸ் கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in