மலேசியா பத்து மலை கோயிலில் ஜன. 1-ல் புதுப்பொலிவுடன் முருகன் சிலை திறப்பு விழா

மலேசியா பத்து மலை கோயிலில் ஜன. 1-ல் புதுப்பொலிவுடன் முருகன் சிலை திறப்பு விழா
Updated on
1 min read

கோலாலம்பூர்: மலேசியா பத்து மலை முரு​கன் கோயி​லில் ஜன.1-ம் தேதி புதுப்​பொலிவுடன் சிலை திறப்பு விழா நடை​பெற​வுள்​ளது.

மலேசி​யா​வில் கோலாலம்​பூர் அருகே கோம்​பாக் மாவட்​டத்தில், சுண்​ணாம்பு மலைக்​குன்​றுகளுக்கு இடையே இயற்கை சூழலில் பத்து மலை முரு​கன் கோயில் உள்​ளது. இந்​தக் கோயிலின் முன்​பாக 140 அடி உயர முரு​கன் சிலை பிர​திஷ்டை செய்​யப்பட்​டுள்​ளது.

இங்கு தைப்​பூச திரு​விழா வெகு விமரிசை​யாக நடத்​தப்பட்டு வரு​கிறது. இக்​கோயிலுக்கு 272 படிகள் ஏறிச் சென்று மூல​ரான முரு​கனை தரிசிக்க வேண்டும். இவ்​வாறு போகும் போது, வழி​யில் பலகுகைகள் உள்​ளன. பல்​வேறு சுவாமிகளின் சன்​ன​தி​களும் உள்​ளன.

இக்​கோயி​லின் முகப்​பில் பிரம்​மாண்​ட​மான முரு​கன் சிலை அமைக்​கப்​பட்​டுள்​ளது. 140 அடி உயர​முள்ள இச்​சிலைக்கு தங்க வர்​ணம் பூசப்​பட்டு இருக்​கும். தற்​போது இச்​சிலை பகு​தி​யில் பராமரிப்​புப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதனால் இச்​சிலை திரை போட்டு மூடப்​பட்டுள்​ளது.

இந்​தப் பணி​கள் முழுமை பெற்று வரும் ஜன.1-ம் தேதி பிரம்​மாண்​ட​மான முறை​யில் புதுப்​பொலிவுடன் திறப்பு விழா நடை​பெற உள்​ள​தாக கோயில் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. ஆனால், இந்த முரு​கன் சிலை முன் நின்று புகைப்​படம், அல்​லது வீடியோ எடுத்து கொள்​ ளலாம் என வரும் திரளான வெளி​நாட்டு பக்​தர்​கள் பராமரிப்​புப் பணி​களால் சற்று ஏமாற்றம் அடைந்து வரு​கின்றனர்​ என​ உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மலேசியா பத்து மலை கோயிலில் ஜன. 1-ல் புதுப்பொலிவுடன் முருகன் சிலை திறப்பு விழா
அபய்குமார் சிங்குக்கு கூடுதலாக டிஜிபி பொறுப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in