நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர  திருவிழாவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.  படங்கள்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். படங்கள்: மு.லெட்சுமி அருண்

Updated on
1 min read

திருநெல்வேலி: ​திருநெல்​வேலி நெல்​லை​யப்​பர் கோயில் ஆடிப்​பூர திரு​விழா​வில் காந்​தி​மதி அம்​பாளுக்கு வளை​காப்பு வைபவம் நடை​பெற்​றது.

திருநெல்​வேலி நெல்​லை​யப்​பர் கோயி​லில் ஆடிப்​பூர திரு​விழா கடந்த 9-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. அன்று மாலை​யில் ஊஞ்​சல் மண்​டபத்​தில் காந்​தி​மதி அம்​பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்​றும் அலங்​கார தீபா​ராதனை நடை​பெற்​றது.

தொடர்ந்து 10 நாட்​கள் நடை​பெறும் இத்​திரு​விழா​வில், சுவாமி, அம்​பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்​காரம், இரவில் பல்​வேறு வாக​னங்​களில் ரத வீதி​யுலா நடை​பெற்று வரு​கிறது.நேற்று காலை​யில் அம்​பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது. இதைத்​தொடர்ந்து அம்​பாள் சந்​நிதி ஊஞ்​சல் மண்​டபத்​தில் காந்​தி​மதி அம்​பாளுக்கு வளை​காப்பு வைபவம் நடை​பெற்​றது. இதில் குழந்தை பாக்​கி​யம் வேண்டி பக்​தர்​கள் அம்​பாளுக்கு வளை​யல் காணிக்கை வழங்கி வழிபட்​டனர். பெண்​களுக்கு மஞ்​சள், குங்​குமம், வளை​யல் பிர​சாதம் வழங்​கப்​பட்​டது.

வரு​கிற 18-ம் தேதி காலை​யில் காந்​தி​மதி அம்​பாள் பல்​லக்​கில் வலம் வரும் வைபவம், அதைத் தொடர்ந்து பொற்​றாமரை குளத்​தில் அம்​பாள் தீர்த்​த​வாரி, இரவு ஊஞ்​சல் மண்​டபத்​தில் காந்​தி​மதி அம்​பாளுக்கு முளைக்​கட்டு திரு​விழா நடைபெறவுள்​ளன.

<div class="paragraphs"><p>திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர  திருவிழாவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.  படங்கள்: மு.லெட்சுமி அருண்</p></div>
“ஒரு மணி நேரத்தில் ஒப்பந்த மீறல்” - ஈரான் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in