திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
Updated on: 
1 min read

திருமலை: திருப்பதி ஏழு​மலை​யான் கோயி​லில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவங்​கள் நடை​பெறுகிறது. கடந்த செப்​டம்​பர் மாதம் 15 முதல் 23-ம் தேதி வரை வரு​டாந்​திர பிரம்மோற்சவம் நடந்து முடிந்​தது.

இந்நிலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. இவ்விழா வரும் 20-ம் தேதி வரை நடை​பெற உள்ளது. முதல் நாளான நேற்று காலை உற்சவ மூர்த்​தி​களான ஸ்ரீதே​வி, பூதேவி உடன் மலை​யப்​பர் தங்க பல்​லக்​கில் 4 மாட வீதிகளில் ஊர்​வல​மாக உலா வந்து பக்​தர்​களுக்கு காட்சியளித்தார். அப்​போது, மாட வீதி​களில் கூடி இருந்த பக்தர்கள் ‘கோ​விந்தா கோவிந்​தா’ என கோஷமிட்டு சுவாமியை வழிபட்​டனர்.

நவராத்​திரி பிரம்​மோற்சவ விழா​வினையொட்​டி, திருப்​பதி நகரமும், திரு​மலை​யும் மின் விளக்​கு​களால் ஜொலிக்​கிறது. திருப்பதி நகரில் உள்ள 14 கூடல்​களி​லும் மிக அழகாக, ஆன்​மிக காட்​சிகளை மின்​விளக்கு அலங்​காரம் மூலம் மக்​களை கவரும் விதத்​தில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதே​போன்​று, திரு​மலை முழு​வதும் மின்​விளக்கு அலங்​காரங்​கள், தோரணங்​கள், கட்​-அவுட்கள், மலர் அலங்​காரங்​கள் செய்​யப்​பட்டு திரு​மலையே விழாக்​கோலம் பூண்​டுள்​ளது. ஏழு​மலை​யான் கோயில் முகப்பு கோபுரம் உட்பட பலிபீடம், கொடிக்​கம்​பம், உப சன்​ன​தி​கள் என அனைத்து இடங்​களி​லும் அழகிய மலர் அலங்​காரங்​கள், மின்விளக்கு அலங்​காரம் செய்​யப்​பட்​டுள்​ளது.

பெரிய சேஷ வாக​னம்: நேற்​றிரவு பெரிய சேஷ வாக​னத்​தில் ஸ்ரீதேவி, பூதே​வி​யுடன் மலை​யப்​பர் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள் பாலித்​தார். இதில் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்​டனர்.

இதில் தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி எம். ரவிசந்​தி​ரா, கூடு​தல் நிர்​வாக அதி​காரி வெங்​கைய்ய சவுத்​ரி, அறங்​காவலர் குழு தலை​வர் மற்​றும் உறுப்​பினர்​கள், நூற்​றுக்​கணக்​கான பக்​தர்​கள்​ இதில்​ பங்​கேற்​றனர்​.

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 2 நாட்களில் தொடங்க வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in