

நாகூர் ஆண்டவர் தர்கா
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் செய்யது அப்துல் காதிர் நாயகம் தர்காவில் 470-ம் ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு கடந்த 7-ம் தேதி மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இந்நிகழ்வில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 19-ம் தேதி இரவு தாபூத்து என்னும் சந்தனக்கூடு ஊர்வலம் நாகையில் இருந்து புறப்பட்டு, 20-ம் தேதி அதிகாலை நாகூரை வந்தடையும். அப்போது ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெறும். 23-ம் தேதி கொடியிறக்கம் செய்யப்பட்டு கந்தூரி விழா நிறைவுபெறும்.