அண்ணாமலையார் கோயிலில் மீண்டும் பிரசாதம்: விறகு அடுப்பை பயன்படுத்தி லட்டு தயாரிப்பு

பக்தர்களுக்கு வழங்க அறநிலையத் துறை ஏற்பாடு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்களுக்கு இலவச மாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்களுக்கு இலவச மாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

Updated on
1 min read

திருவண்ணாமலை: ​திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயி​லில் வணிக காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு காரண​மாக நிறுத்​தப்​பட்ட இலவச லட்டு பிர​சாதம் மீண்​டும் வழங்​கும் பணி தொடங்​கி​யது.

அண்​ணா​மலை​யார் கோயிலுக்கு வணிக காஸ் சிலிண்​டர் கிடைக்​காத​தால் பிர​சாதம் தயாரிக்க முடி​யாமல் இலவச​மாகப் பக்​தர்​களுக்கு வழங்​கப்​பட்டு வந்த லட்டு பிர​சாதம் நிறுத்​தப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், நேற்று இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் உத்​தர​வின்​படி, கோயில் வளாகத்​தில் இலவச லட்டு பிர​சாதம் தொடர்ந்து வழங்க நடவடிக்கை மேற்​கொண்​டு, விறகு அடுப்பு மூல​மாக லட்டு தயாரிக்​கும் பணி நடை​பெற்​று, நேற்று காலை முதல் மீண்​டும் பக்​தர்​களுக்கு இலவச லட்டு பிர​சாதம் வழங்​கப்​பட்டு வருகிறது.

அதே​போல் பிர​சாத விற்​பனை நிலை​யத்​தில் புளி சாதம் மற்​றும் சர்க்​கரை பொங்​கல் மட்​டுமே பக்​தர்​களுக்கு விற்​பனை செய்​யப்​படு​கிறது.

லட்டு, அதிரசம், முறுக்​கு, மிளகு வடை ஆகியவை வணிக காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால் தயாரிக்க முடி​யாமல் நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்களுக்கு இலவச மாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.</p></div>
கரூரில் கோயில் நிலங்களில் இருந்த தேர்தல் பணிமனைகள் அகற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in