கொரட்டூர் நாகவல்லி அம்மன் கோயில் ஆடித் திருவிழா: உடலில் மிளகாய் கரைசலை ஊற்றி பக்தர்கள் விநோத நேர்த்திக் கடன்

சென்னை கொரட்டூரில் உள்ள ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு அலகு குத்திக் கொண்டும், காவடி எடுத்தும், உடலில் மிளகாய் சாந்து கரைசலை ஊற்றிக் கொண்டும், பக்தர்கள் விநோத நேர்த்திக் கடன் செலுத்தினர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை கொரட்டூரில் உள்ள ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு அலகு குத்திக் கொண்டும், காவடி எடுத்தும், உடலில் மிளகாய் சாந்து கரைசலை ஊற்றிக் கொண்டும், பக்தர்கள் விநோத நேர்த்திக் கடன் செலுத்தினர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

Updated on
1 min read

சென்னை: கொரட்​டூரில் உள்ள ஓம்​சக்தி நாகவல்லி அம்​மன் கோயி​லில் நடை​பெற்ற ஆடித் திரு​விழா​வில், ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​று, மிள​காய் சாந்து கரைசலில் குளித்து விநோதமாக நேர்த்​திக் கடனைச் செலுத்​தினர்.

சென்னை அடுத்த கொரட்டூர் டிஎன்​எச்பி குடி​யிருப்​பு, 47-வது தெரு​வில் அமைந்​துள்​ளது ஓம்​சக்தி நாகவல்லி அம்​மன் கோயில். இக்​கோ​யில் சுமார் 50 ஆண்​டு​கள் பழமை​யானது.

தொடக்​கத்​தில் ஒரு வேப்​பமர​மும், புற்​றும் மட்​டுமே இருந்த இடத்​தில், நாகவல்லி அம்​மனைப் பிர​திஷ்டை செய்து பக்​தர்​கள் வழிபடத் தொடங்​கினர். திருமண வரம் மற்​றும் குழந்தை வரம் வேண்டி வரும் பக்​தர்​களின் வேண்​டு​தல்​கள் நிறைவேறும் இடமாக இக்​கோ​யில் திகழ்​கிறது.

தற்​போது, ஆடி மாதத்தை முன்​னிட்டு இக்​கோயி​லில் திரு​விழா கோலாகல​மாக நடை​பெற்று வரு​கிறது. ஆடி 2-வது வாரத் திரு​விழாவை முன்​னிட்​டு, நேற்று சுமார் 1,500-க்​கும் மேற்​பட்ட பக்​தர்​கள் பால்​குடம் எடுத்​தும், அலகு குத்​தி​யும் ஊர்​வல​மாக வந்து அம்​மனுக்கு நேர்த்​திக்​கடன் செலுத்​தினர்.

விழா​வின் ஒரு பகு​தி​யாக, பக்​தர்​கள் உடல் முழு​வதும் மிள​காய் தூள் கலந்த சாந்து கரைசலை ஊற்றி விநோத நேர்த்​திக் கடன் செலுத்​தினர். மாலை​யில், 500-க்​கும் மேற்​பட்ட பக்​தர்​கள் தீக்​குண்​டத்​தில் இறங்கி தீமி​தித்து அம்​மனை வழிபட்​டனர்.

விழா​வின் நிறை​வாக, எலுமிச்​சை, செவ்​வாழை, ஆப்​பிள், சாத்​துக்​குடி, தர்​பூசணி மற்​றும் அன்​னாசி போன்ற பல்​வேறு பழங்​களால் சிறப்பு அலங்​காரம் செய்​யப்​பட்ட நாகவல்லி அம்​மன் திரு​வீதி உலா நடை​பெற்​றது.

இதில், கொரட்டூர், அம்​பத்​தூர், பாடி உள்​ளிட்ட சுற்​று​வட்​டாரப் பகு​தி​களைச் சேர்ந்த ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் பங்​கேற்று சாமி தரிசனம் செய்​தனர்.

இதே​போல், சென்​னை​யின் முக்​கிய அம்​மன் கோயில்​களான மயி​லாப்​பூர் முண்​டகக்​கண்ணி அம்​மன் மற்​றும் கோல​விழி அம்​மன் கோயில், பிராட்வே காளி​காம்​பாள் கோயில், பாடி படவேட்​டம்​மன் கோயில், வில்​லி​வாக்​கம் பாலி அம்​மன் கோயில், சூளை அங்​காளம்​மன் கோயில் உள்​ளிட்ட பல இடங்​களில் நேற்று சிறப்பு வழி​பாடு​கள் நடை​பெற்​றன. அங்கு திரளான பக்​தர்​கள் கூழ்​ வார்த்​தும்​, பொங்​கலிட்​டும் அம்மனை வழிபட்டனர்.

<div class="paragraphs"><p>சென்னை கொரட்டூரில் உள்ள ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு அலகு குத்திக் கொண்டும், காவடி எடுத்தும், உடலில் மிளகாய் சாந்து கரைசலை ஊற்றிக் கொண்டும், பக்தர்கள் விநோத நேர்த்திக் கடன் செலுத்தினர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |</p></div>
சென்னை, புறநகரில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி: அமைச்சர் ஆனந்த் இன்று தொடங்கி வைக்கிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in