திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா இன்று தொடக்கம்: பக்தர்களுக்கு பிஸ்கட், சிற்றுண்டி வழங்க ஏற்பாடு

திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயில். அடுத்த படம்: கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகையில் விரதம் இருப்பதற்காக இடம் பிடித்து தங்கியிருக்கும் பக்தர்கள்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். அடுத்த படம்: கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகையில் விரதம் இருப்பதற்காக இடம் பிடித்து தங்கியிருக்கும் பக்தர்கள்.

Updated on: 
2 min read

தூத்துக்குடி: திருச்​செந்​தூரில் கந்​தசஷ்டி பெரு​விழா இன்று தொடங்​கு​கிறது. தரிசனத்​துக்​காக வரிசையில் காத்​திருக்​கும் பக்​தர்​களுக்கு தண்​ணீர் பாட்​டில், பிஸ்​கட், சிற்​றுண்டி வழங்க ஏற்​பாடுகள் செய்​யப்​பட்​டுள்​ளன.

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திரு​விழா, யாகசாலை பூஜையுடன் இன்று (நவ.10) தொடங்​கு​கிறது. விழாவை முன்​னிட்டு இன்று அதி​காலை 1 மணிக்கு நடைதிறக்​கப்​பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய​மார்த்​தாண்ட அபிஷேகம், அதைத் தொடர்ந்து தீபாராதனை நடை​பெறுகிறது.

காலை 5 மணிக்​குமேல் சுவாமி ஜெயந்​திநாதர் வள்ளி, தெய்​வானையுடன் யாகசாலை​யில் எழுந்​தருள்​கிறார். காலை 7 மணி அளவில் யாகசாலை பூஜை தொடங்​கு​கிறது.

பல்​லாயிரக்​கணக்​கான பக்​தர்​கள், திருச்​செந்​தூருக்கு வந்து தங்கி சஷ்டி விரதமிருந்து சூரசம்​ஹாரத்தை காண்​பார்​கள். சஷ்டி விழாவுக்​காக தமிழகத்​தின் பல்​வேறு பகுதி​களில் இருந்​தும் பக்​தர்​கள் நேற்று முதலே திருச்​செந்​தூரில் குவிந்து வரு​கின்​றனர். கோயில் வளாகத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள தற்​காலிக கொட்​டகைகளில் இடம் பிடித்து தங்​கி​யுள்​ளனர். அங்​குள்ள தனியார் தங்​கும் விடுதி​கள், மண்​டபங்​கள், சமுதாயக் கூடங்​கள், மடங்​களி​லும் பக்​தர்​கள் நேற்று காலை முதல் வந்து தங்​கி​யுள்​ளனர்.

பக்​தர்​களுக்​கான வசதி​கள், விழா ஏற்​பாடுகள் குறித்து இந்து சமய அறநிலை​யத்​துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஆண்​டுதோறும் வெகு​விமரிசையாக நடை​பெறும் கந்​தசஷ்டி பெரு​விழா, இந்த ஆண்டு நவ.10-ம் தேதி (இன்று) தொடங்​கு​கிறது.

விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் நவ.15-ம் தேதி​யும், திருக்​கல்​யாணம் நவ.16-ம் தேதி​யும் நடை​பெறவுள்​ளன. கந்​தசஷ்டி விரதத்​தின் முதல் ஐந்து நாட்​களில் நாள்​தோறும் சுமார் ஒரு லட்​சம் பக்​தர்​களும், சூரசம்​ஹார நாளில் 6 லட்​சம் பக்​தர்​களும், திருக்​கல்​யாண நாளில் 2 லட்​சம் பக்​தர்​களும் வரு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதை கருத்​தில்​கொண்டு, விரதம் மேற்​கொள்​ளும் பக்​தர்​களின் வசதிக்​காக 11 இடங்​களில் மொத்​தம் 1 லட்​சத்து 2,673 சதுர அடி பரப்​பளவில் நிழற்​கொட்​டகைகள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. இக்​கொட்​டகைகளில் குடிநீர், கழிப்​பறை உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. மேலும், கோயில் வளாகத்​தில் உள்ள நிரந்​தரக் கழிப்​பறைகளு​டன் கூடுதலாக 300 தற்​காலிகக் கழிப்​பறைகளும் அமைக்​கப்​படு​கின்​றன.

விழா நாட்​களில் நாள்​தோறும் 15 ஆயிரம் பக்​தர்​களுக்கு அறுசுவை உணவு வழங்​கும் வகை​யில் அன்​னதானத்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. முதி​ய​வர்​கள், மாற்​றுத் திறனாளி​கள் எளிதாக கோயிலுக்கு வந்து செல்​லும் வகை​யில், கோயில் நிர்​வாகத்​தின் சார்​பில் 4 கட்​ட​ணமில்லா சுற்​றுப் பேருந்​துகள் இயக்​கப்​பட உள்​ளன.

பொது தரிசனம் மற்​றும் முதி​யோர் தரிசன வரிசைகளில் காத்​திருக்​கும் பக்​தர்​களுக்கு 6 லட்​சம் குடிநீர் பாட்​டில்​கள், ஒரு லட்​சம் பிஸ்​கட் பாக்​கெட்​கள், சிற்​றுண்​டிகள் வழங்​கப்​பட உள்​ளன. போக்​கு​வரத்து நெரிசலைத் தவிர்க்க 12 இடங்​களில் தற்​காலிக பேருந்து நிறுத்​தங்​களும், சுமார் 10 ஆயிரம் வாக​னங்​களை நிறுத்​தும் வகை​யில் வாகன நிறுத்​து​மிடங்​களும் ஏற்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

பக்​தர்​களின் பாது​காப்​புக்​காக 493 இடங்​களில் சிசி​டிவி கேம​ராக்​கள், கண்​காணிப்​புக் கோபுரங்​கள் அமைக்​கப்​படு​கின்​றன. விழா நாட்​களில் 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட காவலர்​கள் சுழற்சி முறை​யில் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட உள்​ளனர். மேலும், கோயில் சார்ந்த பாது​காப்​புப் பணிகளில் வெளிமுகமை மூலம் 789 பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட உள்​ளனர்.

திருப்​பரங்​குன்​றம்: முருகப் பெரு​மானின் முதல் படை வீடான திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் தங்கி விரதம் மேற்​கொள்​ளும் பக்​தர்​களின் எண்​ணிக்கை ஆண்​டுதோறும் அதி​கரித்து வரு​கிறது. இதை கருத்​தில்​கொண்டு, பக்​தர்​கள் தங்கி விரதமிருப்​ப​தற்​காக புதிதாக அமைக்​கப்​பட்​டுள்ள சஷ்டி மண்​டபம் இந்த ஆண்டு முதல் பயன்​பாட்​டுக்கு கொண்​டுவரப்​பட உள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயில். அடுத்த படம்: கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகையில் விரதம் இருப்பதற்காக இடம் பிடித்து தங்கியிருக்கும் பக்தர்கள்.</p></div>
“அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” - வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ட்ரம்ப் சந்தேகம்

X