மதுரை விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று மலைக்கு புறப்படுகிறார் கள்ளழகர்

மே 6-ல் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது
சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று பிற்பகல் ஆழ்வார்புரத்தில் உள்ள அறநிலையத் துறை மண்டகப்படியில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  படங்கள்: நா.தங்கரத்தினம்

சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று பிற்பகல் ஆழ்வார்புரத்தில் உள்ள அறநிலையத் துறை மண்டகப்படியில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். படங்கள்: நா.தங்கரத்தினம்

Updated on
2 min read

மதுரை: மதுரை தல்​லாகுளம் ராம​நாத​புரம் மன்​னர் சேதுபதி மண்​டகப்​படி​யில் பூப்​பல்​லக்​கில் எழுந்​தருளிய கள்​ளழகரை பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் நேற்​றிரவு முதல் இன்று காலை வரைவிடிய விடிய தரிசனம் செய்தனர்.

மே 6-ல் திரு​விழா நிறைவு​பெறு​வதை முன்​னிட்டு இன்று மலைக்​குப் புறப்​படு​கிறார். மதுரை அழகர்​கோ​வில் கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா ஏப்​.27-ம் தேதி தொடங்​கியது.

மண்​டூக முனிவருக்கு சாப​விமோசனம் அளிக்க சுந்​தர​ராஜப் பெரு​மாள் கள்​ளழகர் கோலத்​தில் ஏப்​.29-ல் அழகர்​மலை​யி​லிருந்து மதுரைக்​குப் புறப்​பட்​டார்.

ஏப். 30-ல் மூன்​று​ மாவடி​யில் எதிர்​சேவை நடந்​தது. மே 1-ம் தேதி அதி​காலை 5.48 மணிக்கு பச்​சைப் பட்டு உடுத்தி கள்​ளழகர் தங்​கக் குதிரை​யில் வைகை ஆற்​றில் இறங்​கி​னார்.

ராம​ராயர் மண்​டபத்​தில் பக்​தர்​கள் தண்​ணீர் பீய்ச்சி அடித்து தீர்த்​த​வாரி செய்து குளிர்​வித்​தனர். அன்​றிரவு வண்​டியூர் வீர​ராகவப் பெரு​மாள் கோயி​லில் தங்​கி​னார்.

இதையடுத்து 6-ம் நாளான மே 2-ம் தேதி மதுரை வண்​டியூரிலுள்ள பெரு​மாள் கோயி​லிலிருந்து கருட வாக​னத்​தில் புறப்​பா​டாகி தேனூர் மண்​டபத்​தில் சுந்​தர​ராஜ பெரு​மாள் எழுந்​தருளி​னார்.

அங்கு திரு​மஞ்​சன​மாகி மண்​டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்​தார். அதைத் தொடர்ந்து ராம​ராயர் மண்​டபத்​தில் இரவு 11 மணி​யள​வில் எழுந்​தருளி​னார்.

அங்கு திரு​மஞ்​சன​மாகி இரவு தொடங்கி விடிய விடிய தசாவ​தார நிகழ்ச்சி நடை​பெற்​றது. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்​தனர்.

மேலும் 7-ம் நாளான (மே 3) நேற்று காலை 7 மணி​யள​வில் மோகினி அவதா​ரத்​தில் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார். பின்​னர் அனந்​த​ராயர் பல்​லக்​கில் ராஜாங்க திருக்​கோலத்​தில் பிற்​பகல் 3.30 மணி​யள​வில் புறப்​பா​டாகி வழிநெடு​கிலும் உள்ள மண்​டகப்​படிகளில் எழுந்​தருளி​னார்.

அப்​போது அழகரின் சடாரி அக்​கரை​யிலுள்ள மண்​டகப்​படிக்​குக் கொண்டு செல்​லப்​பட்டு பூஜை நடை​பெற்​றது. இதி​லும் ஏராள​மானோர் கலந்து கொண்​டனர்.

பின்​னர், தல்​லாகுளத்​தி​லுள்ள ராம​நாத​புரம் மன்​னர் சேதுபதி மண்​டபத்​தில் இரவு 11 மணிக்கு கள்​ளழகர் எழுந்​தருளி​னார். அங்கு கள்​ளழகர் கோலத்​தில் இன்று (மே 4) அதி​காலை 2 மணி​யள​வில் பூப்​பல்​லக்​கில் எழுந்​தருளி​னார்.

அங்​கும் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் விடிய விடிய தரிசனம் செய்​தனர். பின்​னர் கருப்​பண​சாமி கோயில் வையாளி சேவை முடிந்து தல்​லாகுளம் பெரு​மாள் கோயி​லில் எழுந்​தருளி மதுரை விஜ​யத்தை முடித்து மலைக்​குப் புறப்​பட்​டார்.

தொடர்ந்து ரிசர்வ் லைன், புதூர், சர்​வேயர் காலனி வழி​யாக பல்​வேறு மண்​டகப்​படிகளில் எழுந்​தருளுகிறார். மே 5-ம் தேதி காலை 10.40 மணி​யள​வில் அழகர்​கோ​வில் இருப்​பிடம் சேர்​கிறார்.

மே 6-ல் உற்சவ சாந்​தி​யுடன் திரு​விழா நிறைவு​பெறுகிறது. விழா ஏற்​பாடு​களை கோயில் இணை ஆணை​யர் ரா.ஹரிஹரன் தலை​மை​யில் கோயில் பணி​யாளர்​கள் செய்து வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று பிற்பகல் ஆழ்வார்புரத்தில் உள்ள அறநிலையத் துறை மண்டகப்படியில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  படங்கள்: நா.தங்கரத்தினம்</p></div>
6 புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in