நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் | படம்: மு.லெட்சுமி அருண்.

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் | படம்: மு.லெட்சுமி அருண்.

Updated on
2 min read

நெல்லை: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் இன்று (ஜூன் 28) கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் தேரோட்டத்தில் பங்கேற்று தேர் இழுத்தனர்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனிப்பெருந்திருவிழா பிரசித்தி பெற்றது. இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்று வந்தது.

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் | படம்: மு.லெட்சுமி அருண்.

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் | படம்: மு.லெட்சுமி அருண்.

ஆனி தேர் திருவிழாவில் கோயிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்கும் விதமாக அர்ச்சுனர், கர்ணன், வீரபத்திரர், பகட ராஜா சிலைகளுக்கு புது உடைகள் அணிவிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் அனைவரும் பக்தர்களை வரவேற்கும் விதமாக காட்சியளித்தனர்.

தேருக்கு முன் பஞ்ச வாத்தியம் மற்றும் மேளங்களை வாசித்தபடி இளம் சிவனடியார்கள் வந்ததை பக்தர்கள் ரசித்தனர். சிவனடியார்கள் தேவாரம் திருமுறைகள் புத்தகங்களை தலையில் சுமந்தவாறு பக்தியுடன் தேருக்கு முன்பு நமச்சிவாய மந்திரங்களை உச்சரித்துசென்றனர்.

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் | படம்: மு.லெட்சுமி அருண்.

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் | படம்: மு.லெட்சுமி அருண்.

தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான நெல்லையப்பர் தேர் முழுக்க முழுக்க மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படுகிறது. மிகுந்த சிரமங்களுக்கிடையே அடுத்தடுத்த கட்டத்திற்கு திருத்தேர் நகர்ந்து வரும்பொழுது பக்தர்கள் தங்களது மகிழ்ச்சியினை தெரிவித்து ஆரவாரம் செய்தனர்.

தேர் செல்லும் ரதவீதியின் ஒவ்வொரு திருப்புமுனையிலும், தேரின் சக்கரங்கள் திரும்புவதற்கு பிரேக் கட்டைகளை பயன்படுத்துகின்றனர். இதனை சர்க் கட்டை என்றும், சருக்கு கட்டை என்றும் தமிழ் சொல்வழக்கில் கூறுவார்கள்.

காந்திமதி தேர்| படம்: மு.லெட்சுமி அருண்.

காந்திமதி தேர்| படம்: மு.லெட்சுமி அருண்.

தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலி மாநகரம், வெளிமாவட்ட காவல்துறையினர் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேரோட்ட பாதுகாப்பு பணிக்காக பிரத்யேகமாக ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலின் உட்புறமும், வெளிபுறமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் | படம்: மு.லெட்சுமி அருண்.

கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வர் கோயில் ஆனி தேரோட்டம் கோலாகலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in