சதுரகிரியில் புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாட்டுக்கு மலையேற 4 நாட்கள் அனுமதி

சதுரகிரியில் புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாட்டுக்கு மலையேற 4 நாட்கள் அனுமதி
Updated on: 
1 min read

ஸ்ரீவில்லி: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு அக்டோபர் 8 முதல் 11-ம் தேதி வரை பக்தர்கள் மலையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் உள்ள சதுரகிரி மலையில் பிரசித்திபெற்ற சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மாதம்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை மற்றும் முக்கிய விழா காலங்களில் மட்டும் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

ஆடி அமாவாசை, தை அமாவாசைக்கு அடுத்து புரட்டாசி மகாளய அமாவாசை முக்கிய திருவிழா ஆகும். இந்த ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி மகாளய அமாவாசை வருவதை முன்னிட்டு அக்டோபர் 8 முதல் 11-ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாணிப்பாறை அடிவாரம் வழியாக காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட உள்ளனர்.

சதுரகிரியில் புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாட்டுக்கு மலையேற 4 நாட்கள் அனுமதி
கோவை, நீலகிரியில் கனமழையும், 20 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in