மலைப்பாதை ஓடைகளில் வெள்ளம்: சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை

மலைப்பாதை ஓடைகளில் வெள்ளம்: சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை
Updated on
1 min read

வத்திராயிருப்பு: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்ததால், சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்ந்து பெய்வதால் வரும் நாட்களிலும் மழைப்பொழிவு மற்றும் ஆற்றில் நீர்வரத்தை பொறுத்தே பக்தர்கள் மலை யேற அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து நீரோடை மற்றும் காட்டாறுகளை கடந்து 7 கிலோ மீட்டர் கரடு முரடான மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும்.

இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக சதுரகிரி மலைப்பாதையில் உள்ள தாணிப்பாறை ஓடை, மாங்கனி ஓடை, மலட்டாறு, சங்கிலிப்பாறை ஓடை ஆகிய வற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி மலையேற தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களிலும் மழைப்பொழிவு மற்றும் ஓடையில் நீர்வரத்தை பொறுத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மலைப்பாதை ஓடைகளில் வெள்ளம்: சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை
“எங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க வைத்ததே திமுக தான்!” - பொன்.ராதாகிருஷ்ணன் நேர்காணல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in