தூத்துக்குடியில் தூய பனிமய மாதா பேராலய பெருவிழா கொடியேற்றம்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். (உள்படம்) பேராலயத்தில் வீற்றிருக்கும் தூய பனிமய அன்னை. படங்கள்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். (உள்படம்) பேராலயத்தில் வீற்றிருக்கும் தூய பனிமய அன்னை. படங்கள்: என்.ராஜேஷ்

Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்​துக்​குடி தூய பனிமய மாதா பேராலய பெரு​விழா கொடியேற்​றம் நேற்று நடை​பெற்​றது. இதில், பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொண்​டனர்.

தூத்​துக்​குடி​யில் அமைந்​துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேரால​யத்​தில் 444-வது ஆண்டு பெரு​விழா நேற்று தொடங்​கியது. இதையொட்டி நேற்று அதி​காலை 4.30 மணிக்கு ஜெப​மாலை​யுடன் பெரு​விழா பிரார்த்தனை​கள் தொடங்​கின. தொடர்ந்து மூன்று திருப்​பலிகள் நடை​பெற்​றன. காலை 7 மணிக்கு தூத்​துக்​குடி மறை​மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலை​மை​யில் சிறப்பு கூட்​டுத் திருப்​பலி நடை​பெற்​றது.

தொடர்ந்​து, பேரால​யத்​தில் இருந்து திருக்​கொடியை ஆயர் ஸ்டீபன், மேள​தாளங்​கள் முழங்க, பேரால​யத்தை சுற்றி பவனி​யாக எடுத்து வந்​தார். பின்​னர் பேரால​யத்​துக்கு முன்​புள்ள கொடிமரத்​தில் அன்​னை​யின் திருக்​கொடியை ஆயர் ஏற்றி வைத்​தார். அப்​போது அங்கு திரண்​டிருந்த பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் ‘மரியே வாழ்க’ என்று முழக்​கமிட்​டனர். கொடி ஏற்​றப்​பட்டபோது சமா​தானத்தை குறிக்​கும் வகை​யில் வெண்​புறாக்​கள் பறக்​க​விடப்​பட்​டன.

மேலும், பேரால​யத்​துக்கு எதிரே பழைய துறை​முகத்​தில் இருந்து சைரன் ஒலி எழுப்​பப்​பட்​டது. பக்​தர்​கள் நேர்ச்​சை​யாக பால் குடம், வாழைத்​தார் போன்​ற

வை​களை கொடிமரத்​தின் பீடத்​தில் வைத்து வழிபட்​டனர். சிலர் தங்​கள் குழந்​தைகளை​யும் கொடிமரத்​தின் பீடத்​தில் வைத்து அன்​னை​யிடம் ஒப்​புக் கொடுத்​தனர். கொடியேற்​றம் முடிந்​ததும் பால் மற்​றும் பழத்தை பக்​தர்​களுக்கு பிர​சாத​மாக வழங்​கினர்.

கொடியேற்ற நிகழ்ச்​சி​யில், தமிழக மனிதவள மேலாண்மை மற்​றும் முன்​னாள் படைவீரர் நலத்​துறை அமைச்​சர் த.சரத்​கு​மார், மீன்​வளம் மற்​றும் மீனவர் நலத்​துறை அமைச்​சர் ஆ.ஸ்ரீ​நாத்,மாவட்ட ஆட்​சி​யர் விஷு மகாஜன், தூத்​துக்​குடி மாநக​ராட்சி மேயர் ஜெகன் பெரிய​சாமி, துணை மேயர் ஜெனிட்டா உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்டனர்.

பொன் மகுடம்: தொடர்ந்து பகல் 12 மணிக்கு முன்​னாள் பங்​குத்​தந்தை ஸ்டார்​வின் தலை​மை​யில் அன்​னைக்கு பொன் மகுடம் அணி​வித்​தல் நிகழ்வு நடை​பெற்​றது. பேரால​யத்​தில் உள்ள பனிமய மாதா சொரூபத்​துக்கு பொன் மகுடம் மற்​றும் தங்​கம், வைரம், வெள்ளி ஆபரணங்​கள் அணிவிக்​கப்​பட்​டன. மாலை​யில் சிறப்பு திருப்​பலி, ஜெப​மாலை, நற்​கருணை ஆசீர் நடை​பெற்​றது.

ஆகஸ்ட் 4-ம் தேதி 10-ம் நாள் திரு​விழா​வில் இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்​தில் அன்​னை​யின் திரு​வுருவ சப்பர பவனி நடை​பெறுகிறது. அன்​னை​யின் பெரு​விழா தின​மான ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 7.30 மணிக்கு பெரு​விழா சிறப்பு கூட்​டுத் திருப்​பலி நடை​பெறுகிறது. அன்று மாலை 7 மணி​யள​வில் நகர வீதி​களில் அன்​னை​யின் திரு​வுருவ பவனி நடை​பெறும். இதற்கான ஏற்​பாடு​களை பேராலய அதிபர் ஜான் செல்வம், உதவி பங்​குத்​தந்தை ஜெரால்​டு, அருட்​சகோ​தரர் மைக்​சன் மற்​றும் பங்கு பேர​வை​யினர், இறைமக்​கள் செய்​துள்​ளனர்.

<div class="paragraphs"><p>தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். (உள்படம்) பேராலயத்தில் வீற்றிருக்கும் தூய பனிமய அன்னை. படங்கள்: என்.ராஜேஷ்</p></div>
காமன்வெல்த் 2026: பளுதூக்குதலில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தை வென்றார் மீராபாய் சானு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in