பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்

பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்
Updated on
1 min read

பழநி: பழநி பெரிய​நாயகி​யம்​மன் கோயி​லில் வைகாசி விசாகத் திரு​விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. விழா​வின் முக்​கிய நிகழ்​வாக தேரோட்​டம் மே 30-ம் தேதி மாலை நடை​பெறுகிறது.

திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லின் உபகோயி​லான பெரிய​நாயகி​யம்​மன் கோயி​லில் வைகாசி விசாகத் திரு​விழாவை முன்​னிட்டு சேவல், மயில், வேல் படங்​கள் பொறிக்​கப்​பட்ட கொடிக்கு சிறப்பு பூஜை செய்​யப்​பட்டு நேற்று கொடியேற்​றம் நடை​பெற்​றது.

முன்​ன​தாக முத்​துக்​கு​மாரசு​வாமி, வள்​ளி, தெய்​வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்​காரம் மற்​றும் தீபா​ராதனை நடை​பெற்​றது. திரு​விழா​வின் 10 நாட்​களும் பல்​வேறு வாக​னங்​களில் சுவாமி வீதி​யுலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலிக்​கிறார். விழா​வின் 6-ம் நாளான மே 29-ம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் திருக்​கல்​யாணம் நடை​பெறுகிறது.

மே 30-ம் தேதி தேரேற்​றம், மாலை 4.30 மணிக்கு மேல்தேரோட்​டம் நடை​பெறுகிறது. ரத வீதி​களில் வள்​ளி, தெய்​வானை சமேத முத்​துக்​கு​மாரசு​வாமி தேரில் வலம் வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலிக்​கிறார். ஜூன் 2-ம் தேதி காலை திருஊடல் நிகழ்ச்​சி​யும், இரவில் கொடி இறக்​கத்​துடன் விழா நிறைவு பெறுகிறது. வைகாசி விசாக விழாவை முன்​னிட்டு பழநி மலைக்​கோயி​லில் உச்​சிக்​கால பூஜை​யில் தண்​டா​யுத​பாணி சுவாமி, விநாயகர், சண்​முகர், வள்​ளி, தெய்​வானை, சின்​னக்​கு​மாரர், துவார​பால​கர்​கள், மயிலுக்கு காப்​பு​கள் கட்​டப்​பட்​டன.

பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: இரண்டு வாரங்களில் 4-வது முறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in