

திருப்பதி: பிரம்மோற்சவத்தையொட்டி கடந்த 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை திருப்பதியில் பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம், மாதவம் ஆகிய 3 இடங்களில் வழங்கப்பட்டு வந்த சர்வ தரிசன டோக்கன்களை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.
முன்னறிவிப்பு ஏதும் இன்றி ரத்து செய்ததால், பக்தர்கள் தரிசன டோக்கன்களுக்காக அலையும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், வரும் 24-ம் தேதி வரை சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனினும் 25-ம் தேதி தரிசன்த்திற்கு வரும் 24-ம் தேதி 3 இடங்களில் டோக்கன் விநியோகம் செய்யப்படுமென தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.