குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கொடியேற்றம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி வேடமணிந்தனர்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. (அடுத்த படம்)  காப்புக் கட்டி விரதம் தொடங்குவதற்காக கோயிலில் குவிந்த பக்தர்கள்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. (அடுத்த படம்) காப்புக் கட்டி விரதம் தொடங்குவதற்காக கோயிலில் குவிந்த பக்தர்கள்.

Updated on: 
1 min read

தூத்துக்குடி: குலசேகரன்​பட்​டினம் முத்​தா​ரம்​மன் கோயில் தசரா திரு​விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் காப்பு கட்டி வேடமணிந்​தனர்.

தூத்​துக்​குடி மாவட்​டம் குலசேகரன்​பட்​டினத்​தில் உள்ள ஞானமூர்த்​தீஸ்​வரர், முத்​தா​ரம்​மன் கோயி​லில் ஆண்​டு​தோறும் தசரா விழா 11 நாட்​கள் சிறப்​பாக கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. இந்​தி​யா​வில் கர்​நாடகா மாநிலம் மைசூர் சாமுண்​டீஸ்​வரி அம்​மன் கோயிலுக்கு அடுத்​த​படி​யாக இங்கு நடக்​கும் தசரா திரு​விழா, உலகப் பிரசித்தி பெற்​றது. இந்த ஆண்டு தசரா திரு​விழா, குலசேகரன்​பட்​டின்த்​தில் நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

இதை முன்​னிட்டு நேற்று அதி​காலை​யில் அலங்​கரிக்​கப்​பட்ட யானை​யில் கொடிப்​பட்​டம் திரு​வீ​தி​யுலா​வாக கொண்டு வரப்​பட்​டு, காலை 5 மணி அளவில் கோயில் முன்பு உள்ள கொடிமரத்​தில் ஏற்​றப்​பட்​டது. அப்​போது கோயி​லில் திரண்​டிருந்த பக்​தர்​கள் ‘தாயே முத்​தா​ரம்​மா’, ‘ஓம் காளி, ஜெய் காளி’ என விண்​ண​திர முழக்​கமிட்​டனர். தொடர்ந்து கொடிமரத்​துக்கு அபிஷேக​மும், சிறப்பு தீபா​ரா​தனை​களும் நடை​பெற்​றன.

கோயில் வளாகத்​தில் திரண்​டிருந்த ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் காப்பு அணிந்​தனர். விழா நாட்​களில் இவர்​கள் பல்​வேறு வேடங்​களை அணிந்து அம்​மனுக்கு காணிக்கை வசூலிப்​பார்​கள். இரவு 10 மணி அளவில் அம்​மன் சிம்ம வாக​னத்​தில் துர்க்கை கோலத்​தில் எழுந்​தருளி முக்​கிய வீதி​களில் பவனி வந்​தார்.

விழா நாட்​களில் தின​மும் இரவு அம்​மன் பல்​வேறு கோலங்​களில் எழுந்​தருளி திரு​வீ​தி​யுலா வரும் நிகழ்வு நடை​பெறும். விழா​வின் முக்​கிய நிகழ்​வான மகிஷா சூரசம்​ஹாரம் வரும் 20-ம் தேதி நடை​பெறுகிறது. அன்று நள்​ளிரவு 12 மணிக்கு அம்​மன் சிம்ம வாக​னத்​தில் கடற்​கரை சிதம்​பரேஸ்​வரர் கோயில் முன் எழுந்​தருளி மகிஷா சூரனை வதம் செய்​வார். இந்​நிகழ்ச்​சி​யில் தமி​ழ​கம் மட்​டுமின்றி அண்டை மாநிலங்​களில் இருந்​தும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​துகொள்​வர்.

<div class="paragraphs"><p>குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. (அடுத்த படம்)  காப்புக் கட்டி விரதம் தொடங்குவதற்காக கோயிலில் குவிந்த பக்தர்கள்.</p></div>
ரியாத் விமான நிலைய தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு: 11 இந்தியர்கள் உட்பட 300 பேர் படுகாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in