சபரிமலையில் திரண்ட கட்டுக்கடங்காத கூட்டம்: குடிநீர், கழிப்பிடமின்றி பக்தர்கள் அவதி

சபரிமலை அடிவாரப் பகுதியான பம்பையில் நேற்று கூடிய பெருந்திரளான பக்தர்கள் கூட்டம்.

சபரிமலை அடிவாரப் பகுதியான பம்பையில் நேற்று கூடிய பெருந்திரளான பக்தர்கள் கூட்டம்.

Updated on
1 min read

குமுளி: சபரிமலை மகர​கால வழி​பாட்​டில் இது​வரை இல்​லாத அளவுக்கு கட்​டுக்​கடங்​காத கூட்​டம் திரண்​ட​தால் நேற்று பெரும் நெரிசல் ஏற்​பட்​டது. குடிநீர், கழிப்​பிடம் உள்​ளிட்ட அடிப்​படை தேவை​களுக்கு பக்​தர்​கள் திண்​டாடியதுடன், 8 மணி நேரத்​துக்கும் மேல் காத்​திருந்து தரிசனம் செய்​தனர்.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் 14-ம் தேதி மகர​விளக்கு பூஜை நடை​பெற உள்​ளது. இதற்​காக கடந்த 30-ம் தேதி மாலை கோயில் நடை திறக்​கப்​பட்​டது. இது​வரை சுமார் 6.5 லட்​சம் பக்​தர்​கள் தரிசனம் செய்​துள்​ளனர். உற்சவ நிகழ்ச்​சிக்கு இன்​னும் ஒரு வாரமே உள்​ள​தால் பக்தர்​கள் கூட்​டம் கடந்த 2 நாட்​களாகவே அதி​கரித்து வரு​கிறது.

இந்​நிலை​யில் சபரிமலை வழித்​தடங்​களில் இது​வரை இல்​லாத கூட்​டம் நேற்று இருந்​தது.எரி​மேலி​யில் இருந்து பெரு​வழிப்​பாதை, பம்​பை, கணபதி கோயில், மரக்​கூட்​டம், அப்​பாச்​சிமேடு, பெரிய நடைப்​பந்​தல் உள்​ளிட்ட பகு​தி​களி​லும் கட்​டுக்​கடங்​காத கூட்​டம் இருந்​தது. குறிப்​பாக சந்​நி​தானத்​தில் இருந்து மரக்​கூட்​டம் வரை ஒதுங்​கக்​கூட இடம் இல்​லாத நிலை​யில் நெரிசல் ஏற்​பட்​டது. மேலும் பம்பை பாலத்​தின் தொடக்​கத்​தில் இருந்து திரு​வேணி சங்கமம், கணபதி கோயில் ​வா​யில் வரை நெரிசல் ஏற்​பட்​டது. இரு​முடி​யுடன் 8 மணி நேரத்​துக்​கும் மேல் காத்​திருந்து சந்நிதானத்தை அடை​யும் நிலையே நேற்று இருந்​தது. இதனால் குடிநீர், கழிப்​பிடம், உணவுக்கு பக்​தர்​கள் சிரமப்​பட்​டனர்.

இலவச குடிநீர் வழங்​கப்​படு​வதும் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. இதனால் பக்தர்கள் பரிதவித்தனர். அளவுக்கு மீறிய கூட்​டத்தைகட்​டுப்​படுத்​துவது காவல்​துறை,சிறப்பு அதிரடிப்​படை​யினருக்கு பெரும் சவாலாக உள்​ளது. ஸ்பாட் புக்​கிங்கை குறைத்து கூட்​டத்தை முறைப்​படுத்தி அனுப்​பி​னால்​தான் ஐயப்​பனை சிரமமின்றி தரிசிக்க முடி​யும் என்று பக்​தர்​கள்​ கோரிக்​கை விடுத்​துள்​ளனர்​.

<div class="paragraphs"><p>சபரிமலை அடிவாரப் பகுதியான பம்பையில் நேற்று கூடிய பெருந்திரளான பக்தர்கள் கூட்டம்.</p></div>
உதவி பேராசிரியர் தேர்வு: உத்தேச விடைகள் வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in