உதவி பேராசிரியர் தேர்வு: உத்தேச விடைகள் வெளியீடு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: அரசு கல்​லூரி உதவிப் பேராசிரியர் தேர்​வுக்​கான உத்​தேச விடைகளை ஆசிரியர் தேர்வு வாரி​யம் வெளி​யிட்டுள்​ளது.

இதுதொடர்​பாக வாரி​யத்​தின் தலை​வர் எஸ்​.ஜெயந்தி வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு:அரசு கலை மற்​றும் அறி​வியல்கல்​லூரி​கள், அரசு கல்​வி​யியல் கல்​லூரி​களுக்​கான உதவிப் பேராசிரியர் போட்​டித் தேர்வு கடந்த டிச.27-ம் தேதி நடை​பெற்​றது. காலை​யில் நடந்த தேர்​வுக்​கான (தாள் 1-ல் பகு​தி-ஏ மற்​றும் பகு​தி-பி) உத்​தேச விடைக்​குறிப்​பு​கள் (கீ ஆன்​ஸர்) https://trb1.ucanapply.com என்ற தளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

இதன் மீது ஆட்​சேபம் தெரிவிக்க விரும்​பும் தேர்​வர்​கள் ஜன.13 மாலை 5.30 மணி வரைபதிவுசெய்​ய​லாம். சான்று ஆவணங்​கள் இல்​லாத முறை​யீடு​கள் பரிசீலிக்கப்​ப​டாது. அங்​கீகரிக்​கப்​பட்ட பாடப்​புத்​தகங்​களை மட்​டுமே ஆதா​ர​மாக அளிக்க வேண்​டும். பாட வல்​லுநர்​களின் முடிவே இறு​தி​யானது. இணை​ய​வழி​யில் இல்​லாமல் தபால் அல்​லது பிறவழி முறை​யீடு​கள் கண்​டிப்​பாக ஏற்​றுக்​கொள்​ளப்பட மாட்​டாது. இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
கரூர் நெரிசலில் 41 பேர் இறந்த வழக்கு: தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in