ஏழுமலையானை தரிசிக்க என்ஆர்ஐ.களுக்கு சலுகை

ஏழுமலையானை தரிசிக்க என்ஆர்ஐ.களுக்கு சலுகை
Updated on
1 min read

திருமலை: வெளிநாட்டு வாழ் இந்திய பக்தர்கள் (என்ஆர்ஐ) தாயகம் வந்த பின்னர் 30 நாட்களுக்குள் ஏழுமலையானை சிறப்பு தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் அவகாசம் வழங்கி இருந்தது. ஆனால் இதை நீட்டிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை பரிசீலித்த தேவஸ்தான அதிகாரிகள், 30 நாள் கெடுவை 90 நாட்களாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர். திருப்பதி தேவஸ்தானம் மற்றொரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

ஆன்லைனில் தரிசனத்திற்கு ஒரு நாளுக்கு முன்னர் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆபண்ண ஹ்ருதய’ திட்டத்துக்காக தேவஸ்தான அறக்கட்டளைக்கு ‘டோனர்’ பிரிவில் சென்று ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினால், அதன் பின்னர் 5 பேருக்கான விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளுக்கென மேலும் ரூ.2,500 செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால், அவர்கள் மறுநாள் காலையில் விஐபி பிரேக் தரிசனம் மூலம் சுவாமியை தரிசிக்கலாம்.

ஏழுமலையானை தரிசிக்க என்ஆர்ஐ.களுக்கு சலுகை
திரிணமூல் காங். பிரமுகரின் குளத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in