திரிணமூல் காங். பிரமுகரின் குளத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு

திரிணமூல் காங். பிரமுகரின் குளத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் பிர​முகர் ஒரு​வருக்கு சொந்​த​மான குளத்​தில் இருந்து பெரு​மளவு துப்​பாக்​கி​கள் மற்​றும் வெடிபொருட்​களை அதிரடிப் படை​யினர் மீட்​டுள்​ளனர்.

இதுதொடர்​பான உளவுத் தகவலின் பேரில் சந்​தேஷ்​காலி மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் நேற்று காலை மாநில காவல் துறை​யின் அதிரடிப் படை வீரர்​கள் சோதனை மேற்​கொண்​டனர். அப்​போது திரிண​மூல் காங்​கிரஸ் பிர​முகர் ராபின் தாஸுக்கு சொந்​த​மான ஒரு குளத்​தில் இருந்து பெரு​மளவி​லான துப்​பாக்​கி​கள், தோட்​டாக்​கள் மற்​றும் வெடிபொருட்​களைக் கைப்​பற்​றினர்.

இந்த சோதனைக்கு முன்பே ராபின் தாஸ், அவரது சகோ​தரர் கோபால் தாஸ் ஆகிய இரு​வரும் அப்​பகு​தியை விட்டு தப்​பி​விட்​டனர். அவர்​களைப் போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். இப்​பகு​தி​யில் கலவரம் ஏற்​படுத்​து​வதற்​காக இந்த ஆயுதங்​கள் பதுக்கி வைக்​கப்​பட்​டிருக்​கலாம் என போலீ​ஸார் சந்​தேகிக்​கின்​றனர்.

திரிணமூல் காங். பிரமுகரின் குளத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு
பஞ்சாப் பொற்கோயில் வளாகத்தில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in