காணிப்பாக்கம் விநாயகரை அருகில் தரிசிக்கலாம்: தேவஸ்தானம் புதிய திட்டம்

காணிப்பாக்கம் விநாயகரை அருகில் தரிசிக்கலாம்: தேவஸ்தானம் புதிய திட்டம்
Updated on
1 min read

சித்தூர்: தமிழக எல்​லை​யில் ஆந்​திர மாநிலம், சித்​தூர் அருகே காணிப்​பாக்​கம் எனும் ஊரில் பிரசித்தி பெற்ற சுயம்பு வரசித்தி விநாயகர் கோயில் உள்​ளது.

இந்​தக் கோயிலுக்கு தமிழகம், கர்​நாடகம், ஆந்​தி​ரா, தெலங்​கானா ஆகிய மாநிலங்​களில் இருந்து தின​மும் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் வரை வரு​கின்​றனர். ஆயிரம் ஆண்​டு​கள் பழமை​யான இக்​கோ​யில் தற்​போது விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டு, பல்​வேறு வளர்ச்​சிப் பணி​களும் நடை​பெற்று வரு​கிறது.

இங்கு ஆண்​டு​தோறும் விநாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு பிரம்​மோற்​சவம் வெகு சிறப்​பாக நடத்​தப்​படு​கிறது. இக்​கோயி​லில் அதிகாலை முதல் இரவு ஏகாந்த சேவை வரை பக்​தர்​கள் திரண்டு வந்து சுவாமியை தரிசித்து விட்டு செல்​வ​தால், பக்​தர்​களுக்கு வசதி​யாக சுவாமியை கரு​வறை அருகே சென்று தரிசிக்​கும் முறையை கோயில் தேவஸ்​தானம் அமல்​படுத்தி உள்​ளது. இதற்கு ஒரு​வருக்கு தலா ரூ.500 கட்​ட​ண​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

காலை 10 மணி​யில் இருந்து 11 மணி வரை​யிலும் மதி​யம் 3 மணியில் இருந்து 4 மணி வரை​யிலும் இதற்​காக நேரம் ஒதுக்கப்பட்​டுள்​ளது. காணிப்​பாக்​கம் தேவஸ்​தான நிர்​வாக அதிகாரி பி.கிஷோர், முதல் டிக்​கெட்டை பெற்​றுக்​கொண்டு தனது குடும்​பத்​தா​ருடன் சுவாமி தரிசனம் செய்து இத்​திட்​டத்தை தொடங்கி வைத்​தார். இத்​திட்​டம் தொடங்​கப்​பட்ட முதல் நாளிலேயே 438 பக்​தர்​கள் தலா ரூ.500 கட்​ட​ணம் செலுத்​தி சுவாமியை வழிபட்​டனர்​.

காணிப்பாக்கம் விநாயகரை அருகில் தரிசிக்கலாம்: தேவஸ்தானம் புதிய திட்டம்
மார்ச் 8-ல் சமயபுரம் கோயிலில் பூச்சொரிதல் விழா: திமுக மாநில மாநாடு தேதி மாற்றப்படுகிறதா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in