திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கோலாகல தொடக்கம்

திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

Updated on
1 min read

சென்னை: ​திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி பெரு​மாள் கோயில் பிரம்​மோற்​சவம் நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. மே 3-ம் தேதி (நாளை) கருட சேவை, மே 7-ம் தேதி தேரோட்​டம் நடை​பெறுகிறது.

சென்​னை​யின் ஆன்​மிக அடை​யாள​மாக​வும், 108 வைணவ திவ்ய தேசங்​களில் ஒன்​றாக​வும் திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி சுவாமி கோயில் திகழ்​கிறது.

இத்​தலத்​தில் வீற்​றிருக்​கும் மூல​வர் பார்த்​த​சா​ரதி பெரு​மாளுக்கு சித்திரை மாதத்​தி​லும், மேற்கு நோக்கி அருள்​பாலிக்​கும் நரசிம்ம பெரு​மாளுக்கு ஆனி மாதத்​தி​லும் ஆண்​டு​தோறும் பிரம்​மோற்சவ விழாக்​கள் நடை​பெறு​வது வழக்​கம்.

அந்த வகை​யில், இந்த ஆண்​டுக்​கான பார்த்​த​சா​ரதி பெரு​மாள் சித்திரை பிரம்​மோற்சவ விழா, நேற்று அதி​காலை கொடியேற்​றத்​துடன் கோலாகல​மாகத் தொடங்​கியது. விழா​வின் முதல் நாளன்று திரளான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

இரவு 7.45 மணி அளவில், பார்த்​த​சா​ரதி பெரு​மாள் புன்னை மர வாக​னத்​தில் மாட​வீ​தி​களில் உலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார். பிரம்​மோற்​சவத்​தின் முக்​கிய நிகழ்​வு​களில் ஒன்​றான கருட சேவை நாளை (மே 3) அதிகாலை 5 மணிக்கு நடை​பெறுகிறது.

அன்று மதி​யம் 12 மணிக்கு ஏகாந்த சேவை நடை​பெறும். மே 4-ம் தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்​திர பிரபை​யில் பெரு​மாள் எழுந்​தருளி வீதிஉலா நடை​பெறவுள்​ளது.

விழா​வின் மற்​றொரு முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் மே 7-ம் தேதி நடை​பெறுகிறது. அன்று அதி​காலை 4.30 மணிக்கு பெரு​மாள் திருத்​தேரில் எழுந்​தருள, காலை 7 மணிக்கு தேரோட்​டம் தொடங்​கும்.

மே 10-ம் தேதி ‘சப்​தாவர்​ணம்’ எனும் சிறிய திருத்​தேர் நிகழ்​வுடன் இந்த ஆண்​டுக்​கான பிரம்​மோற்சவ விழா நிறைவடைகிறது.

இந்த விழா நாட்​களில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் வருகை தரு​வார்​கள் என்​ப​தால், அவர்​களுக்​குத் தேவை​யான குடிநீர், பாது​காப்பு உள்​ளிட்ட அடிப்​படை வசதி​களை கோயில் நிர்​வாக​மும்​, காவல்​துறை​யினரும்​ செய்​து வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. | படங்கள்: <em>எஸ்.சத்தியசீல</em>ன் |</p></div>
அதிமுக 200 இடங்களில் வெல்லும்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நம்பிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in