சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா: ஜூன் 13-ம் தேதி கொடியேற்றம்

சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா: ஜூன் 13-ம் தேதி கொடியேற்றம்
Updated on
1 min read

சென்னை: சென்னை வியாசர்​பாடி​யில் அமைந்​துள்ள சுமார் 800 ஆண்​டு​கள் பழமை வாய்ந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க மரக​தாம்​பாள் உடனுறை இரவீஸ்​வரர் கோயி​லில் இந்த ஆண்​டுக்​கான பிரம்​மோற்சவ ​விழாவரும் 13-ம் தேதி கொடியேற்​றதுடன் தொடங்​கு​கிறது.

இதை முன்னிட்டு ஜூன் 11-ம் தேதி கிராம தேவதை உத்​தரவு - பாலாத்தம்மன் கோயில் பூஜை, 12-ம் தேதி கணபதி ஹோமம் நடக்​கிறது.

ஜூன் 13-ம் தேதி காலை 8.30 மணிக்கு கொடியேற்​றத்​துடன் பிரம்​மோற்சவ விழா தொடங்​கு​கிறது. இதையடுத்து ரிஷப வாகன உற்​சவம், சூரிய பிரபை, சந்​திர பிரபை உற்​சவம், அதி​கார நந்தி சேவை, ஆகியவை நடை​பெற உள்​ளன.

ஜூன் 19-ம் தேதி காலை 8.30 மணிக்கு விழா​வின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் நடை​பெறுகிறது.

ஜூன் 22-ம் தேதி காலை 5.30 மணிக்கு நடராஜ தரிசனம், காலை 9 மணிக்கு தீர்த்​த​வாரி, இரவு 8 மணிக்கு திருக்​கல்​யாண உற்​சவம் நடை​பெறுகிறது.

23-ம் தேதி கொடி​யிறக்​கத்​துடன் விழா நிறைவு​பெறுகிறது. 24-ம் தேதி விடை​யாற்றி உற்​சவம் நடக்​கிறது.

தமிழக முதல்​வர் விஜய்​யின் பெரம்​பூர் தொகு​திக்கு உட்​பட்ட பகு​தி​யில் இக்​கோ​யில் அமைந்​துள்​ள​தால், பிரம்​மோற்சவ விழா மற்​றும் தேரோட்​டத்தை சிறப்​பாக நடத்​து​வது குறித்த அனைத்​துத் துறை அதி​காரி​களின் ஆலோசனைக் கூட்​டம் நடை​பெற்​றது.

சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா: ஜூன் 13-ம் தேதி கொடியேற்றம்
ஆவடியில் மின் இணைப்பு பெட்டிகளில் 27 பியூஸ் கேரியர்கள் திருட்டு: இரு இளைஞர்கள் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in