தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை

ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட இஸ்லாமியர்கள்
நாகூர் தர்காவில் நேற்று நடைபெற்ற பக்ரீத் திருநாள் சிறப்புத்  தொழுகையில் பங்கேற்ற பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த இஸ்லாமியர்்கள்.

நாகூர் தர்காவில் நேற்று நடைபெற்ற பக்ரீத் திருநாள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த இஸ்லாமியர்்கள்.

Updated on
1 min read

நாகப்பட்டினம்: பக்​ரீத் பண்​டிகையையொட்​டி, பிரசித்தி பெற்ற நாகூர் தர்​கா​வில் நேற்று திரளான முஸ்​லிம்​கள் சிறப்​புத் தொழுகை​யில் ஈடு​பட்​டனர்.

இறை தூத​ரான நபிகளாரின் தியாகத்தை நினை​வு​கூரும் வகை​யில், முஸ்​லிம்​களின் முக்​கிய பண்​டிகை​யான பக்​ரீத் திரு​நாள் உலகம் முழு​வதும் கொண்​டாடப்​படு​கிறது. அதன்​படி, நாகை மாவட்​டம் நாகூர் தர்​கா​வில் உள்ள நவாப் பள்​ளி​யில் பக்​ரீத் பண்​டிகையை கொண்​டாடும் வித​மாக நேற்று நடை​பெற்ற சிறப்​புத் தொழுகை​யில் ஏராள​மான இஸ்லாமியர்கள் புத்​தாடை அணிந்து பங்​கேற்றனர்.

தொழுகைக்கு பின்​னர் ஒரு​வரை ஒரு​வர் ஆரத்​தழுவி பக்​ரீத் வாழ்த்​துகளை பகிர்ந்து கொண்​டனர். இதே​போல, நாகூர் தர்​காவை சுற்​றி​யுள்ள காதிரியா மதரஸா, திவானஷா பள்​ளித் தெரு பள்​ளி​வாசல், செய்​யது பள்​ளி​வாசல், ஏழு லெப்பை ஜாமியா மஸ்​ஜித், பாத்​திமா பள்​ளி​வாசல், தோழை சாஹிப் தைக்​கால் ஆகிய பள்​ளி​வாசல்​களி​லும் சிறப்​புத் தொழுகை நடை​பெற்​றது.

மேலும், நாகை மாவட்​டத்​தில் நாகூர், நாகை, திட்​டச்​சேரி, வடகரை உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் உள்ள 66 பள்​ளி​வாசல்​களி​லும் இஸ்லாமியர்கள்​ பக்​ரீத் சிறப்புத் தொழுகை​யில் ஈடு​பட்​டனர்.

ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பு: பக்ரீத் பண்டிகையை யொட்டி தமிழகம் முழுவதும் ஆடு, மாடு, ஒட்​டகம் போன்​றவற்றை இறைவனின் பெய​ரால் பலி​யிட்டு அவற்றை மூன்று சமபங்​கு​களாக பிரித்​து, ஒரு பங்கை அண்டை வீட்​டாருக்​கும், நண்​பர்​களுக்​கும், மற்​றொரு பங்கை ஏழைகளுக்​கும் கொடுத்​து​விட்டு மூன்​றாவது பங்கை தங்​கள் தேவை​களுக்​கும் பயன்​படுத்தி இஸ்லாமியர்கள் மகிழ்ச்​சி​யாகக் கொண்​டாடினர்.

<div class="paragraphs"><p>நாகூர் தர்காவில் நேற்று நடைபெற்ற பக்ரீத் திருநாள் சிறப்புத்  தொழுகையில் பங்கேற்ற பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த இஸ்லாமியர்்கள்.</p></div>
டி.கே.சிவகுமார் உள்ளே... சித்தராமையா வெளியே... - கர்நாடக முதல்வர் ‘பவர் டீலிங்’கில் அடுத்து என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in