தஞ்சாவூர் பெரிய கோயிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி தொடக்கம்

தஞ்சை பெரிய கோயிலில் நேற்று ஆஷாட நவராத்திரி தொடக்க விழாவில், இனிப்பு அலங்காரத்தில் வராகி அம்மன்.

தஞ்சை பெரிய கோயிலில் நேற்று ஆஷாட நவராத்திரி தொடக்க விழாவில், இனிப்பு அலங்காரத்தில் வராகி அம்மன்.

Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்​சாவூர் பெரிய கோயி​லில் உள்ள வராகி அம்​மனுக்​கான ஆஷாட நவராத்​திரி விழா நேற்று தொடங்​கியது. இதையொட்​டி, காலை கணபதி ஹோமம், கணபதி அபிஷேகம், வராகி அம்​மன் சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது. பின்​னர், அம்​மனுக்கு இனிப்பு அலங்​காரம் செய்​யப்​பட்​டது. மாலை​யில் பரத​நாட்​டிய இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது.இந்​நிகழ்​வில், ஏராள​மானோர் கலந்​து​கொண்​டு, வராகி அம்​மனை தரிசனம் செய்​தனர்.

இதைத் தொடர்ந்​து, இன்று (ஜூலை 14) முதல் 23-ம் தேதி வரை தின​மும் அம்​மன் பல்​வேறு அலங்​காரங்​களில் அருள் பாலிக்க உள்​ளார். விழா நாட்​களில் தின​மும் காலை 8 மணிமுதல் 10 மணி வரை வராகி ஹோமம், காலை 10 மணி முதல் 11 மணி வரை சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்​காரம், மாலை 6.30 மணிக்கு இசை நிகழ்ச்​சிகள் நடை​பெறுகின்​றன.

விழா​வின் நிறைவு நாளான ஜூலை 23-ம் தேதி தென்னக பண்​பாட்டு மையம் சார்​பில் நாகசுரம், கரகாட்​டம், ஒயி​லாட்​டம், செண்டை மேளம், வாணவேடிக்கை ஆகிய​வற்​றுடன் நான்கு ராஜவீ​தி​களில் வராகி அம்​மன் வீதி​யுலா நடை​பெறுகிறது. விழா ஏற்​பாடு​களை அரண்​மனை தேவஸ்​தான பணி​யாளர்​கள் செய்து வருகின்​றனர்​.

<div class="paragraphs"><p>தஞ்சை பெரிய கோயிலில் நேற்று ஆஷாட நவராத்திரி தொடக்க விழாவில், இனிப்பு அலங்காரத்தில் வராகி அம்மன்.</p></div>
“ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும்; கப்பல்களுக்கு 20% கட்டணம்” - ட்ரம்ப் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in