சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

‘சிவ சிவ’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருஉத்தரகோசமங்கை கோயிலில் சந்தனக் காப்புடன் ஆருத்ரா தரிசன கோலத்தில் காட்சியளித்த மரகத நடராஜர்.

திருஉத்தரகோசமங்கை கோயிலில் சந்தனக் காப்புடன் ஆருத்ரா தரிசன கோலத்தில் காட்சியளித்த மரகத நடராஜர்.

Updated on
1 min read

கடலூர் / ராமநாதபுரம்: சிதம்​பரம் நடராஜர் கோயி​லில் மார்​கழி மாத ஆருத்ரா தரிசன விழா நேற்று நடை​பெற்​றது. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் ‘சிவ சிவ’ என்ற முழக்​கத்​துடன் நடராஜப் பெரு​மானை தரிசனம் செய்​தனர்.

பஞ்ச பூத ஸ்தலங்​களில் ஆகா​யத் தலமான சிதம்​பரம் நடராஜர் கோயி​லில் சிவ​காமசுந்​தரி சமேத நடராஜமூர்த்​தி​யின் மார்​கழி ஆருத்ரா தரிசன உற்​சவம் கடந்த 25-ம் தேதி தொடங்​கியது.

முக்​கிய நிகழ்​வான ஆருத்ரா தரிசனம் நேற்று நடை​பெற்​றது. இதையொட்டி நேற்று அதி​காலை சிவ​காமசுந்​தரி சமேத நடராஜமூர்த்​திக்கு மகா அபிஷேகம் நடை​பெற்​றது. பின்​னர் சித்​சபை​யில் ரகசிய பூஜை நடந்​தது. பஞ்​சமூர்த்தி வீதி​யுலா வந்த பின்​னர் மதி​யம் 3.20 மணிக்கு ஆயிரங்​கல் மண்​டபத்​தில் இருந்து ஸ்ரீநட​ராஜரும், சிவ​காமி சுந்​தரி அம்​பாளும் சித்​சபைக்கு சென்​றனர். ஏராள​மான பக்​தர்​கள் ‘சிவ சிவ’ முழக்​கத்​துடன் சுவாமி தரிசனம் செய்​தனர்.

மார்​கழி மாத சிறப்பு நிகழ்​வின் தொடர்ச்​சி​யாக இன்று (ஜன.4) பஞ்​சமூர்த்தி முத்​துப்​பல்​லக்கு வீதி உலா, நாளை (ஜன.5 ) ஞானப்​பிர​காசம் குளத்​தில் தெப்ப உற்​சவம் நடை​பெறுகிறது. விழா ஏற்​பாடு​களை கோயில் பொதுதீட்​சிதர்​கள் செய்​துள்​ளனர்.

திருஉத்தரகோசமங்கை கோயில் ​ராம​நாத​புரம் மாவட்​டம் திரு உத்​தரகோசமங்​கை​யில் உலகின் முதல் சிவாலயமாக கருதப்​படும் மங்​கள​நாத சுவாமி கோயில் அமைந்​துள்​ளது. இங்கு பச்சை மரகதக் கல்​லால் ஆன மரகத நடராஜருக்கு ஆண்​டு​தோறும் நடை​பெறும் ஆருத்ரா தரிசன விழா மிக​வும் சிறப்பு பெற்​றது. ஆருத்ரா தரிசனம் நடை​பெறும் தினத்​தன்று நடராஜர் சிலைக்கு சந்​தனக்​காப்பு சாத்​தப்​பட்​டு, ஆண்டு முழு​வதும் பாது​காக்​கப்​படு​கிறது.

இக்​கோயி​லில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 25-ம் தேதி காப்​புக்​கட்​டு​தலுடன் தொடங்​கியது. நேற்று முன்​தினம் காலை மூல​வர் நடராஜப் பெரு​மானுக்கு சந்​தனம்​படி களைதல் நடை​பெற்​றது. தொடர்ந்​து, 33 வகை​யான அபிஷேகங்​கள் நடை​பெற்​றன. அப்​போது, நடராஜர் சந்​தனக் காப்​பின்றி மரகத திரு​மேனி​யாய் காட்​சி​யளித்​தார். ஆண்​டில் ஒரு​நாள் மட்​டும் சந்​தனக் காப்​பின்றி நடராஜர் காட்​சி​யளிப்​ப​தால், ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர். இரவு 10 மணிக்கு கூத்​தர் பெரு​மான் கல்​தேர் மண்​டபம் எழுந்​தருளல் நிகழ்ச்சி நடை​பெற்​றது. நள்​ளிரவு வரை நடராஜரை பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். தொடர்ந்​து, நள்​ளிரவு மூல​வர் நடராஜப் பெரு​மானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடை​பெற்​றது.

நேற்று (ஜன.3) அதி​காலை 4.30 மணி​யள​வில் அருணோதய காலத்​தில் நடராஜருக்கு சந்​தனக்​காப்பு சாத்​தப்​பட்​டு, ஆருத்ரா தரிசனம் நடை​பெற்​றது. தொடர்ந்​து, சோடச உபசார அலங்​கார தீபா​ராதனை நடை​பெற்​றது. காலை​யில் கூத்​தர் பெரு​மான் வீதி உலா​வும், மாலை​யில் பஞ்​சமூர்த்​தி​களுக்கு அபிஷேகம், இரவு மாணிக்​க​வாசக சுவாமிகளுக்கு காட்சி கொடுத்​தல் நிகழ்ச்​சிகளும் நடை​பெற்​றன. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்து நடராஜரை தரிசனம் செய்​தனர்.

<div class="paragraphs"><p>திருஉத்தரகோசமங்கை கோயிலில் சந்தனக் காப்புடன் ஆருத்ரா தரிசன கோலத்தில் காட்சியளித்த மரகத நடராஜர். </p></div>
பழநியில் கலிநடனம் ஆடிய நடராஜர்: ஆருத்ரா விழாவில் நடந்த சுவாரஸ்யம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in