அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்

ஆனி திருமஞ்சனத்தையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த சிவகாம சுந்தரி சமேத நடராஜர்.

ஆனி திருமஞ்சனத்தையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த சிவகாம சுந்தரி சமேத நடராஜர்.

Updated on
1 min read

திருவண்ணாமலை: ​திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயி​லில் ஆனி திரு​மஞ்சன விழா நேற்று நடை​பெற்​றது.

உலக பிரசித்திப்பெற்ற திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயி​லில் எழுந்​தருளி​யுள்ள நடராஜருக்கு ஆண்​டு​தோறும் மார்​கழி மாதம் திரு​வா​திரை நட்​சத்​திரத்​தில் ஆருத்ரா தரிசன​ம் மற்​றும் ஆனி மாதம் உத்​திர நட்​சத்​திரத்​தில் ஆனி திரு​மஞ்​சன​ம் நடை​பெறு​வது சிறப்​புமிக்​கது.

ஆண்​டுக்கு 2 முறை கோயி​லின் 2-ம் பிர​காரத்​தில் இருந்து புறப்​பட்டு 5-ம் பிர​காரத்​தில் உள்ள ஆயிரம் கால் மண்​டபத்​தில் சிவ​காமசுந்​தரி சமேத நடராஜ பெருமாள் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு காட்​சி​யளிப்​பது வழக்​கம். அதன்​படி, ஆனி திரு​மஞ்​சனத்​தையொட்டி அண்​ணா​மலை​யார் கோயி​லில் நேற்று முன்​தினம் இரவு சுவாமி புறப்​பாடு நடை​பெற்று ஆயிரம் கால் மண்​டபத்​தில் சிவ​காமசுந்​தரி சமேத நடராஜர் எழுந்​தருளி​னார். இந்​நிலை​யில், நேற்று ஆனி திரு​மஞ்சன விழாவையொட்​டி, ஆயிரங்​கால் மண்​டபத்​தில் சிவ​காமசுந்​தரி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது.

இதையடுத்​து, வண்ண மலர்​களால் சிறப்பு அலங்​காரம் செய்​யப்​பட்டு தீபா​ராதனை நடை​பெற்​றது. பின்​னர், 5-ம் பிர​காரத்​திலிருந்து திரு​மஞ்சன கோபுரம் வழி​யாக சிவ​காம சுந்​தரி சமேத நடராஜர் சென்று மாட​வீ​தி​யில் வலம் வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார். இதில், பக்​தர்​கள் திரளாக கலந்​து​கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர். அண்​ணா​மலை​யார் கோயி​லில் நடராஜர் புறப்​பாடு மட்​டும், திரு​மஞ்​சனம் கோபுரம் வழி​யாக மட்​டுமே நடை​பெறு​வது தனி சிறப்​பாகும்​.

<div class="paragraphs"><p>ஆனி திருமஞ்சனத்தையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த சிவகாம சுந்தரி சமேத நடராஜர்.</p></div>
திரிணமூல் காங்கிரஸில் இருந்து மம்தா பானர்ஜி நீக்கம்: புதிய தலைவர் தேர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in