சபரிமலையில் 7.50 லட்சம் பேருக்கு அன்னதானம்

சபரிமலையில் 7.50 லட்சம் பேருக்கு அன்னதானம்
Updated on
1 min read

குமுளி: சபரிமலை சந்​நி​தானத்​தின் மாளி​கைபுரம் கோயிலுக்​குப் பின்​னால் அன்​ன​தான மண்​டபம் உள்​ளது. கடந்த 17-ம் தேதி மண்டல வழி​பாடு தொடங்​கிய​தில் இருந்து இங்கு அன்​ன​தானம் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

காலை உணவாக உப்​பு​மா, மதி​யம் மசாலா கலவை சாதம், இரவு கஞ்சி வழங்​கப்​படு​கிறது. கடந்த 23-ம் தேதி இரவு வரை 7.45 லட்​சம் பக்​தர்​கள் அன்​ன​தான திட்​டத்​தில் பயனடைந்​துள்​ளனர்.

இதுகுறித்து தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி பைஜி கூறும்​போது, “பக்​தர்​களிடம் இருந்து அன்​ன​தானத்​துக்கு ரூ.1.97 கோடி நன்​கொடை கிடைத்​துள்​ளது. கடந்த ஆண்டு 7 லட்​சம் பேர் அன்​ன​தானத்​தில் பலனடைந்த நிலை​யில், நடப்​பாண்டு எண்​ணிக்கை அதி​கரித்​துள்​ளது.

சபரிமலை​யில் நவீன முறை​யில் பராமரிக்​கப்​படும் மண்​டபத்​தில், ஒரே நேரத்​தில் 800 பேர் வரை உணவருந்​தலாம். மண்டல நாட்​களில் காலை நேரத்​தில் அதி​கபட்​ச​மாக கடந்த 23-ம் தேதி 6,434 பேரும், மதி​யம் 4,965 பேரும், இரவு 7,808 பேரும் உணவருந்​தி உள்​ளனர்​” என்​றார்​.

சபரிமலையில் 7.50 லட்சம் பேருக்கு அன்னதானம்
193 கிலோ போதைப் பொருள் கடத்திய இலங்கையை சேர்ந்த 5 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in