அதிபத்த நாயனார் விழாவையொட்டி தங்க மீன் கடலில் விடும் உற்சவம்

நாகை நம்​பி​யார் நகர் கடற்​கரை​யில் நேற்று நடை​பெற்ற தங்க மீனை கடலில் விடும் உற்சவம். (உள்படம்) கடற்கரையில் எழுந்தருளிய சிவபெருமான்.

நாகை நம்​பி​யார் நகர் கடற்​கரை​யில் நேற்று நடை​பெற்ற தங்க மீனை கடலில் விடும் உற்சவம். (உள்படம்) கடற்கரையில் எழுந்தருளிய சிவபெருமான்.

Updated on
1 min read

நாகப்பட்டினம்: அ​திபத்த நாய​னார் விழாவையொட்​டி, நாகை நம்​பி​யார் நகர் கடற்​கரை​யில் அதிபத்த நாய​னார் தங்க மீனை கடலில் விடும் உற்​சவம் நேற்று வெகு விமர்​சை​யாக நடை​பெற்​றது.

அறு​பத்​து​மூன்று நாயன்​மார்​களில் ஒரு​வ​ரான அதிபத்த நாய​னார் சோழ​நாட்​டின் நாகை கடற்​கரைக்கு அருகே நம்​பி​யார் நகரில் மீனவ குடும்​பத்​தில் பிறந்​தவர். சிறு வயதில் இருந்தே சிவன் மீது மிகுந்த பக்திகொண்ட இவர், தனக்​குக் கிடைக்​கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அர்ப்​பணித்து கடலில் விடு​வதை வழக்​க​மாகக் கொண்​டிருந்​தார். தனக்கு ஒரு மீன் மட்​டுமே கிடைத்​தா​லும் கூட, அதைத் தானும் குடும்​பத்​தினரும் உண்​ப​தற்​குப் பயன்​படுத்​தாமல் சிவனுக்கு அர்ப்​பணித்​தார்.

அவரது இந்த அதீத பக்​தி​யால் ஈர்க்​கப்​பட்ட சிவபெரு​மான், அதிபத்த நாய​னாரை சோதிக்க எண்​ணி, ஒரு​நாள் வெள்ளி மீன் ஒன்​றை​யும், மறு​நாள் ரத்​தின மணி​கள் பதிந்த தங்க மீனை​யும் அதிபத்​த ​நாய​னார் வலை​யில் பிடிபடு​மாறு செய்​தார். அவற்​றை​யும் அதிபத்த நாய​னார் எந்த தயக்​க​மும் இன்றி சிவபெரு​மானுக்கு அர்ப்​பணம் செய்​தார்.

இதையடுத்​து, அதிபத்​தரின் பக்​தியை மெச்​சிய சிவபெரு​மான், பார்​வ​தி​யுடன் இணைந்து அதிபத்​தருக்கு காட்சி தந்து முக்​தி​யளித்​தார். ஆவணி மாதம் ஆயில்​யம் நட்​சத்​திர நாளில் அதிபத்த நாய​னார் முத்​தி​யடைந்​த​தால், அந்​நாளில் நாகை நம்​பி​யார் நகர் மீனவ கிராமத்​தில் மீனவ கிராம மக்​கள் அதிபத்த நாய​னாரின் முக்​திப் பேறு விழாவை கடலில் தங்க மீன், வெள்ளி மீன் பிடிக்​கும் திரு​விழா​வாக கொண்​டாடு​கின்​றனர். அதன்​படி நிகழாண்டு விழா நேற்று நடை​பெற்​றது.

இதையொட்​டி, நாகை நம்​பி​யார் நகரில் உள்ள கோயி​லில் இருந்து நேற்று தங்க மீன், வெள்ளி மீன் மற்​றும் சுவாமிகளு​டன் நம்​பி​யார் நகர் கடற்​கரை வந்​தடைந்​தனர். பின்​னர், அதிபத்த நாய​னார் திரு​மேனியை மீனவர்​கள் படகு ஒன்​றில் வைத்து நடு​கடலுக்​குள் எடுத்​துச் சென்று அங்கு தங்க மீன், வெள்ளி மீன்​பிடித்து கடலில் விடும் சிவார்ப்​பணம் செய்​யும் நிகழ்ச்சி நடை​பெற்​றது.

அப்​போது, சிவபெரு​மான் உற்சவ மூர்த்​தி​யாக கடற்​கரை​யில் எழுந்​தருளி​னார். இதைத்​தொடர்ந்து கடலில் பிடித்து வந்த தங்க மீனை அவருக்​கு படைத்​து, பூஜை நடை​பெற்​றது. அதைத் தொடர்ந்​து, சிவபெரு​மான் அதிபத்​தருக்கு முக்தி தரும் நிகழ்வு நடை​பெற்​றது. இதில் ஏராள​மான சிவனடி​யார்​கள், மீனவர்​கள் மற்​றும் பொது​மக்​கள் பங்​கேற்​றனர்.

<div class="paragraphs"><p>நாகை நம்​பி​யார் நகர் கடற்​கரை​யில் நேற்று நடை​பெற்ற தங்க மீனை கடலில் விடும் உற்சவம். (உள்படம்) கடற்கரையில் எழுந்தருளிய சிவபெருமான்.</p></div>
தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைத் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in