ராஜபாளையம் | நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா தொடக்கம்

ராஜபாளையம் | நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா தொடக்கம்
Updated on
1 min read

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சேத்தூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட தவம்பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் பாண்டிய நாட்டு பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலை தவம்பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொடிமரத்திற்கு மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேம் நடைபெற்றது. வைகாசி விசாக திருவிழாவில் தினசரி கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் கற்பக தரு, காமதேனு, சிம்மம், யானை, வெள்ளி ரிஷபம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேவதானத்திற்கு புறப்பாடாகின்றனர்.

இதனிடையே, விழாவின் 7-ம் நாளான மே 30-ம் தேதி ஸ்ரீ அம்மையப்பர் தவம்பெற்ற நாயகி திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது. ஜூன் 9-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அறங்காவலர் துரைரத்னகுமார், செயல் அலுவலர் கலாராணி ஆகியோர் முன்னிலையில், திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in