பழநியில் போகர் ஜெயந்தி விழா: ஜப்பான் பக்தர்கள் சிறப்பு யாகம்

பழநியில் போகர் ஜெயந்தி விழா: ஜப்பான் பக்தர்கள் சிறப்பு யாகம்
Updated on
1 min read

பழநி: பழநியில் போகர் ஜெயந்தி விழாவையொட்டி புலிப்பாணி ஆஸ்ரமத்தில் இன்று நடந்த சிறப்பு யாகத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆன்மிக குழுவினர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உள்ள மூலவர் சிலை போகர் சித்தரால் பல்வேறு மூலிகைகள் அடங்கிய நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. போகர் சித்தர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அவதரித்தார். நாளை (மே 18) அவரது ஜெயந்தி விழாவையொட்டி, பழநி மலைக்கோயிலில் உள்ள போகர் சந்நிதியில் அவர் வணங்கிய புவனேஸ்வரி அம்மன், மரகத லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது.

இதையொட்டி, இன்று (மே 17) புலிப்பாணி ஆஸ்ரமத்தில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. இதில் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார், ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணியன் கோபால், சிவ ஆதினம் பாலகும்ப குருமுனி தலைமையில் 12 பேர் கொண்ட ஆன்மிக குழுவினர் கலந்து கொண்டனர்.

சிறப்பு யாகத்தில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆன்மிகக் குழுவினர் கூறியதாவது: ''தமிழ் மொழியும், தமிழ் சித்தர்களின் வரலாறும். உலக மக்களின் ஆன்மிக தேடுதலுக்கு, வாழ்க்கை நெறிமுறைகளை அறிவதற்கு வழிகாட்டியாக உள்ளது என்பதை உணர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ளோம். தமிழகம் முழுவதும் 50 கோயில்களில் உலக மக்களின் அமைதிக்காக சிறப்பு யாகம் நடத்த உள்ளோம். அதன்படி, போகர் சித்தரின் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக பழநி வந்துள்ளோம்'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in