

பழநி: பழநி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு உட்பட்ட லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா இன்று (ஏப்.26) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது. ஏழாம் திருவிழா மே 2-ம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், மே 4-ம் தேதி காலை 7.35 மணிக்கு தேரோட்டமும் நடக்க உள்ளது.
மே 5-ம் தேதி காலை 8 மணிக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பெரிய நாயகியம்மன் கோயிலில் இருந்து திரு ஆவினன்குடி கோயிலுக்கு 108 பால்குடங்கள் எடுத்து வருதல், இரவு 8 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்து குமார சுவாமி வெள்ளித் தேரோட்டம் நடக்க உள்ளது.