வைகாசி மாத நட்சத்திர பலன்கள் - புனர்பூசம், பூசம், ஆயில்யம்

வைகாசி மாத நட்சத்திர பலன்கள் - புனர்பூசம், பூசம், ஆயில்யம்
Updated on
3 min read

புனர்பூசம்

எவரையும் தம்பால் இழுத்துக் கொள்ளும் வசீகர சக்தி படைத்த புனர்பூச நக்ஷத்திர அன்பர்களே, இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள்.

தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி வரலாம்.

வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை.

அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். எனினும் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினர் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். கவனமாக பேசுவது அவசியம். உங்களின் எதார்த்தமான வார்த்தைகள் பூதாகரமான பிரச்சனைகளை உண்டாக்கலாம். பெண்களுக்கு:சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும். மாணவர்களுக்கு: ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் ராஜராஜேஸ்வரியை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

+ தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும்.

- கவனமாக பேசுவது அவசியம்

பூசம்

முன்கோபத்தை குறைத்து செயல்படுவதன் மூலம் அதிர்ஷ்ட பாதையில் முன்னேற்றங்கள் பல காணும் பூச நக்ஷத்திர அன்பர்களே, இந்த மாதம் வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும்.

தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது.

அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம். கலைத்துறையினருக்கு நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும்.

பெண்கள் முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

பரிகாரம்: சஷ்டிக் கவசம், சண்முக கவசம் பாராயணம் செய்து முருகனை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.

+ முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்

- வழக்கத்தை விட செலவு கூடும்

ஆயில்யம்

மனசாட்சிக்கு கட்டுபட்டு செயல்படும் ஆயில்ய நக்ஷத்திர அன்பர்களே, இந்த மாதம் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக் கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். எனவே கவனம் தேவை. கண்நோய், பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். திடீர் கோபம் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். சில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள். சுவாரசியமான நபர்களை சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமைகளை அவர்களிடம் எடுத்துக் காட்டுவதன் மூலம் நல்ல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் மாறும். அதிக கவனத்துடன் பொறுப்புகளை கையாள வேண்டும். மேலிடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். நீங்கள் செய்த வேலைகளை மற்றவர்கள் செய்ததாகக் கூறி நற்பெயர் எடுத்துக் கொள்வார்கள். கவனம் தேவை.

பெண்கள் வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம். கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது நல்லது.மாணவர்கள் எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு படிப்பது நல்லது.

பரிகாரம்: வியாழக்கிழமையில் முல்லை மலர் சாற்றி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது கடன் பிரச்சனையை தீர்க்கும். செல்வம் சேரும்.

+ எடுத்த முயற்சிகள் கை கூடும்.

- வரவுக் கேற்ற செலவு ஏற்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in