

பழநி: பழநி முருகன் கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து சின்னக்குமார சுவாமி தங்க மயில் வாகனத்தில் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தார். முன்னதாக, நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதன் பின் பக்தர்கள் வெள்ளத்தில், அரோகரா கோஷத்துடன் தங்க ரதப் புறப்பாடு நடைபெற்றது.
இதே போல் திருஆவினன்குடி முருகன் கோயிலிலும் கிருத்திகை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.