

| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |
அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 19-ம் நாளில் அத்தி வரதர் நீலநிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.
பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திர நாள் என்பதால் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பெருமாளை தரிசிக்கக் கூடினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக மூலவர் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொது தரிசனத்தில் வரிசையில் வரும் பக்தர்களுக்கு சர்க்கரை, உப்புக் கரைசல்கள் வழங்கப்பட்டன. மருத்துவ முகாம் கிழக்கு கோபுரம் அருகே மாற்றப்பட்டுள்ளது.