Published : 27 Oct 2020 12:43 pm

Updated : 27 Oct 2020 12:43 pm

 

Published : 27 Oct 2020 12:43 PM
Last Updated : 27 Oct 2020 12:43 PM

ஐப்பசியில் காவிரியில் நீராடுவோம்! 

aippasi-cauveri

ஐப்பசி மாதத்தில், காவிரியில் நீராடுவது மகா புண்ணியம் என்பார்கள். எனவே ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுங்கள். பாவங்கள் தீர்ந்து புண்ணியங்களைப் பெறுவீர்கள்.

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பார்கள். ஒவ்வொரு மாதமும் ஏதோவொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுவது உண்டு. எந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பு, ஐப்பசி மாதத்துக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மாதத்தில் காவிரி நதியில் குளிப்பது ரொம்பவே விசேஷமானது.
பொதுவாகவே நதியில் நீராடுவது விசேஷம். அதிலும் காவிரி நதி என்பது புண்ணிய நதி. எனவே காவிரி நதியில் எப்போது நீராடினாலும் புண்ணியம். அதிலும் ஐப்பசி மாதத்தில் நீராடுவது மகா புண்ணியம் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.


காவிரி நதியில், ஐப்பசி மாதத்தில் மூன்றரை கோடி புண்ணிய தீர்த்தங்கள் கலப்பதாகச் சொல்கின்றன ஞானநூல்கள். எனவே, ஐப்பசி மாதம் எனப்படும் துலா மாதத்தில், காவிரியில் நீராடுவது அத்தனைத் தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியப் பலன்களைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இந்த மாதத்தில், காவிரியில் நீராடினால், புத்தியில் தெளிவு பிறக்கும். பித்ருக்கள் சாபம் நீங்கப் பெறலாம். குடும்பத்தில் அதுவரை இருந்த குழப்பங்களும் பிரிவுகளும் நீங்கும். தம்பதி இடையே கருத்து ஒற்றுமை மேலோங்கும். முன் ஜென்மப் பாவங்களெல்லாம் தீரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மேலும் துலா ஸ்நானம் செய்யும் போது, தம்பதியாக நின்று காவிரியில் நீராடுவது இன்னும் பலன்களைத் தந்தருளும் என்பதாக ஐதீகம். வீட்டின் தரித்திரம் விலகும். ஐஸ்வரியம் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். வாரிசு இல்லாத தம்பதிக்கு, பிள்ளை பாக்கியம் ஸித்திக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

காவிரியில் நீராடும் போது, ஸ்நான சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும் வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள். மனதுக்குள் உங்கள் பெயரையும் கோத்திரத்தையும் சொல்லி நீராடச் சொல்லி வலியுறுத்துகிறது சாஸ்திரம்.

காவிரியில் ஒரேயொரு முறை நீராடினால், கங்கையில் ஆயிரம் முறை நீராடிய புண்ணியம் கிடைக்கும். தீராத நோயைத் தீர்க்கவல்லது இந்த புண்ணிய நீராடல் என சிலாகிக்கிறது சாஸ்திரம்.

காவிரியில் நீராடுவோம். புண்ணியம் பெறுவோம்!

தவறவிடாதீர்!


ஐப்பசியில் காவிரியில் நீராடுவோம்!ஐப்பசிகாவிரிகாவிரி நீராடல்காவிரி புண்ணியம்ஐப்பசி மாதம்ஐப்பசி விசேஷம்ஐப்பசி மகிமைCauveriIppasiAippasiAippasi maghimai

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x